குடிபோதையில் வந்த மணமகன்!.. வரதட்சணையோடு சேர்த்து… ஒட்டு மொத்தமாக வேட்டு வைத்த மணமகள்!

திருமண நாளன்று மணமகன் குடித்து விட்டு வந்ததற்காக மணமகள் அதிரடி முடிவை எடுத்துள்ளார்.

uttar pradesh bride cancel wedding groom drunk details

உத்தரப்பிரதேசம் மாநிலம் பிரதாப்கார் மாவட்டம் திக்ரி என்ற பகுதியில் கடந்த சனிக்கிழமை அன்று ஒரு திருமணம் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. திருமணத்துக்கான ஏற்பாடுகள் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, மணமகனும், அவரது நண்பர்கள் மற்றும் உறவினர்கள் சிலரும் குடிபோதையில் இருந்துள்ளனர்.

திருமண நிகழ்ச்சி தொடங்குவதற்கு முன்பு, குடிபோதையில் இருந்த மணமகன், திருமணத்துக்கு வந்திருந்தவர்கள் முன்னிலையில் மணமகளை தன்னுடன் நடனமாடும்படி வற்புறுத்தியுள்ளார். இதற்கு மணமகள் ஒப்புக் கொள்ளவில்லை. தொடர்ந்து அவர் குடிபோதையில் தள்ளாடியதைப் பார்த்த மணமகளும், அவரது குடும்பத்தினரும் கோபமடைந்துள்ளனர்.

இதைப் பார்த்த மணமகள், தனக்கு திருமணம் வேண்டாம் என்று கூறியுள்ளார். இதற்கு மணமகள் குடும்பத்தாரும் சம்மதம் தெரிவித்தனர். அதுமட்டுமின்றி, திருமணத்திற்கு பெண் வீட்டார் சார்பில் வரதட்சணையாக கொடுக்கப்பட்ட பணம் மற்றும் பொருட்களை திரும்ப ஒப்படைக்குமாறு மாப்பிள்ளை வீட்டாரிடம் கேட்டனர்.

அப்போது இருதரப்பினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டதால் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து, வரதட்சணைப் பொருட்களை மணமகளிடம் திரும்ப ஒப்படைக்குமாறு போலீசார் கேட்டுக்கொண்டதை அடுத்து, அதற்கு மணமகன் வீட்டார் ஒப்புக்கொண்டனர்.

Contact Us