கலெக்டர் பெயரையே பயன்படுத்தி கல்லா கட்டிய கும்பல்!.. பகீர் பின்னணி! அதிர்ச்சி சம்பவம்!

திருப்பூர் மாவட்ட ஆட்சியர் விஜயகார்த்திகேயன் பெயரில் போலி பேஸ்புக் கணக்கை துவங்கி, பணம் கேட்டு மெசேஜ் அனுப்பிய மோசடி கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.

tiruppur vijayakarthikeyan fake account money cheating gang

திருப்பூர் மாவட்ட ஆட்சியராக இருப்பவர் விஜயகார்த்திகேயன். சமூக வலைதளங்களான ஃபேஸ்புக் , ட்விட்டர் போன்றவைகளில் இவரின் செயல்பாடுகள் அதிகமாகவே இருக்கும். அதனால் இயல்பாகவே இவரின் சமூக வலைதள கணக்கை ஃபாலோ செய்யும் நபர்களின் எண்ணிக்கை அதிகம்.

இந்நிலையில், இவரின் உண்மையான ஃபேஸ்புக் தளத்தை போலவே, பெயர், புகைப்படங்களை வைத்து போலி கணக்கை துவங்கி சில நபர்களுக்கு மெசேஜ் மூலமாக பணம் கேட்கப்பட்டுள்ளது. இதனால் சந்தேகம் அடைந்த நபர்கள் ஆட்சியரின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளனர்.

உடனடியாக போலி கணக்கு தொடர்பாக காவல்துறையினரிடம் புகார் கொடுக்கப்பட்டுள்ளதாகவும், ஃபேஸ்புக் தளத்திற்கும் ரிப்போர்ட் கொடுக்கப்பட்டுள்ளதாகவும் ஆட்சியர் விஜயகார்த்திகேயன் விளக்கம் கொடுத்துள்ளார். மேலும், தன்னுடைய பெயரில் வரும் இதுபோன்ற தவறான தகவல்களை யாரும் நம்ப வேண்டாம் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

 

Contact Us