3,000 அடி ஆழத்தில் மீட்கப்பட்ட சிறுமிகளின் உடல்- தந்தையே இப்படி செய்தாரா ?

ஸ்பெயின் நாட்டில் வசித்து வரும் Tomas Gimeno மற்றும் Beatriz Zimmerman என்ற தம்பதியருக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் Tomas Gimeno அவருடைய மனைவியான Beatriz Zimmerman னிடம் சண்டை போட்டுவிட்டு தன்னுடைய 2 குழந்தைகளுடன் வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். அதன்பின் இவர்கள் குறித்த விவரம் எதுவும் கிடைக்காததால், Tomas ன் குடும்பத்தினர்கள் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர்.

அந்தப் புகாரின் அடிப்படையில் Tomas சையும், அவருடைய 2 குழந்தைகளையும் காவல்துறையினர் தீவிரமாக தேடி வந்தனர். இதனையடுத்து தாமஸ்சினுடைய டைவிங் பாட்டிலும், படுக்கை மெத்தையும் ஸ்பானிஸ்ஸிலிருக்கும் Tenerife தீவின் கடற்கரையில் இருப்பதை காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர். அதன்பேரில் Tenerife தீவை சுற்றியிருக்கும் அட்லாண்டிக் கடலில் தீவிரமான மீட்புப்பணிகள் நடத்தப்பட்டதில், சுமார் 3000 அடி ஆழத்தில் 2 விளையாட்டு பைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அந்த 2 பைகளிலும் சிறுமியின் உடல்கள் இருந்துள்ளது. இது Tomas ஸின் குழந்தைகளாக இருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் 2 சிறுமியின் உடல்களையும் காவல்துறையினர் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதனையடுத்து Tomas சே தன்னுடைய குழந்தைகளை திட்டமிட்டு கொன்று கடலில் வீசி இருக்கலாம் என்று காவல்துறையினர் சந்தேகம் தெரிவிக்கின்றனர்.

Contact Us