அணு ஆராய்ச்சி நிலைய பயிற்சி விஞ்ஞானி தீயில் எரிந்த நிலையில் சடலாமாக மீட்பு!

ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த சத்திய சாய் ராம் என்ற இவர் கடந்த 20ம் தேதி மாயமானார். அவரது பெற்றோர்களின் புகாரின் பேரில் சிசிடிவி காட்சிகள் உதவியுடன் விசாரணை மேற்கொண்ட போலீசார்,இ சி ஆர் சாலையில் உள்ள பெட்ரோல் பாங்கில்,அவர் பெட்ரோல் வாங்கிகொண்டு சைக்கிளில் செல்வதை கண்டறிந்தனர்.

இதனிடையே வயலூர் பாலாறு தடுப்பு அணை அருகே பெட்ரோல் ஊற்றி தீயிட்டு எரிந்த நிலையில் அவரது உடல் மீட்கப்பட்டது.

காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பால் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது கொலை செய்யப்பட்டாரா என்ற கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Contact Us