திருமணமான 20 வயது இளம்பெண் சிறுவனுடன் உடல் உறவில்; சிக்கினார்!

மைனர் சிறுவனுடன் உடலுறவு கொண்டதாக திருமணமான 20 வயது இளம் பெண் ஒருவர் போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

சிறுவர்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கு போக்ஸோ சட்டப்பிரிவின் கீழ் கடுமையான தண்டனை அளிக்கப்பட்டு வருகிறது. பொதுவாக சிறுமிகளிடம் சில்மிஷம் செய்தவர்களும், சிறுமிகளை பாலியல் வன்புணர்வு செய்தவர்களுமே போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டிருப்பதை கேள்விப்பட்டிருப்போம், பெண்கள் இந்த சட்டத்தின் கீழ் கைதாவது அரிதான ஒன்றாகவே அமைகிறது.

அந்த வகையில் குஜராத் மாநிலம் அகமதாபாத்தின் கோக்ராவைச் சேர்ந்த 20 வயதாகும் இளம் பெண் ஒருவர் போக்ஸோ சட்டப்பிரிவின் கீழ் கைதாகி இருப்பது அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

சோனால் பாட்டில் என்ற 20 வயது இளம் பெண்ணுக்கு மிகவும் இளவயதிலேயே திருமணமாகிவிட்டது. இவருக்கு 3 குழந்தைகளும் இருக்கின்றனர். ஆனால் அவரின் மண வாழ்க்கை கசப்பானதாக இருந்துள்ளது. கணவர் தனது நடத்தையின் மேல் சந்தேகம் கொண்டு அடிக்கடி அடித்து துன்புறுத்தியதாக சோனால் கூறுகிறார். இவர் வீட்டு வேலை செய்து பிழைப்பு நடத்தி வருகிறார்.

இந்த நிலையில் கடந்த 6 மாதத்துக்கு முன்னர் தனக்கு அறிமுகமான ஒரு நண்பரின் 17 வயது மகனுடைய அறிமுகம் சோனால் பாட்டீலுக்கு கிடைத்திருக்கிறது. அந்த 17 வயது சிறுவனிடம் தனது மண வாழ்க்கை குறித்த தகவல்களை சோனால் கூறிவந்துள்ளார். மேலும் அவர் தன்னுடைய திருமண வாழ்க்கையில் இருந்து விடுபட விரும்புவதாகவும் அச்சிறுவனிடம் கூறியிருக்கிறார்.

இதன் காரணமாக சோனாலுக்கும் அந்த 17வயது மாணவருக்கும் இடையேயான உறவு நட்பாகி, காதலாகி, ரொமாண்டிக் ரிலேஷன்ஷிப்பாகவும் மாறியிருக்கிறது. ஒரு கட்டத்தில் அந்த மாணவருடன், இளம் பெண் சோனால் பாட்டீல் திடீரென மாயமாகிவிட்டார்.

சிறுவனுடன், மஹிசாகர் மாவட்டத்தில் உள்ள சந்திராம்பூருக்கு சென்று அங்கு இருந்துள்ளார் சோனால். இதனிடையே மாணவரின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் அவரை தேடிய போது இருவரும் இருக்கும் இடத்தை காவல்துறையினர் கண்டறிந்துள்ளனர்.

மாணவரை கடத்தியதாக சோனால் மீது வழக்குப் பதிவு செய்த விசாரித்த போது, சோனால் அந்த மாணவருடன் சந்திராம்பூரில் இருந்த போது உடலுறவு கொண்டதாக தெரிவித்துள்ளார். இதனையடுத்து அவர் மீது போக்ஸோ சட்டப்பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர் அவரை அதிரடியாக கைது செய்தனர்.

முன்னதாக இதே போல கடந்த மே மாதம் குஜராத்தின் ஆனந்த் பகுதியைச் சேர்ந்த 17 வயது மாணவர் ஒருவரை திருமணம் என்ற பெயரில் கடத்தி, அவருடன் பாலியல் உறவு வைத்ததாக 23 வயது இளம் பெண் ஒருவர் போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Contact Us