மாமனார் பிறந்தநாளுக்கு ‘சர்ப்ரைஸ்’ கொடுத்த மருமகள்.. வியந்துபோன சொந்தக்காரர்கள்.. நெகிழ வைத்த சம்பவம்..!

மாமனாரின் பிறந்த நாளுக்கு 70 வகையான உணவுகள் செய்து மருமகள் அசத்திய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Daughter in law cooking 70 different dishes for father in law birthday

ராமநாதபுரம் மாவட்டம் கமுதியில் நகைக்கடை வைத்திருப்பவர் கணேசன். இவர் தனது 70-வது பிறந்தநாளை நேற்று கொண்டாடினார். இதனால் கணேசனுக்கு சர்ப்ரைஸ் கொடுக்க அவரது மருமகள் சரண்யாவும், குடும்பத்தினரும் நினைத்துள்ளனர். அதற்காக என்ன செய்யலாம் என யோசித்த மருமகள், 70 வகையான உணவுகளை தயார் செய்ய முடிவெடுத்தார். உடனே குடும்பத்தினரும் இதற்கு உதவ, விறுவிறுப்பாக வேலை நடந்துள்ளது.

Daughter in law cooking 70 different dishes for father in law birthday

Daughter in law cooking 70 different dishes for father in law birthday

வீட்டில் இருக்கும் பெரியவர்களை கவனிக்க மனமின்றி முதியோர் இல்லங்களுக்கு அனுப்பி, கூட்டுக்குடும்ப முறையை சிதைத்து வரும் தலைமுறைகளுக்கு மத்தியில் இதுபோல் ஒரு சிலர் நம்பிக்கையூட்டுவதாக சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

Contact Us