புதுமண தம்பதி தூக்குப்போட்டு தற்கொலை; உயிரிழந்த 2 பேரும் டாக்டர்கள் ஆவர்; காரணம் என்ன தெரியுமா?

புனே வான்வாடி போலீஸ் நிலையம் அருகே ஆசாத் நகர் பகுதியை சேர்ந்தவர் நிகில். டாக்டரான இவர் சில நாட்களுக்கு முன்பு அங்கிதா(வயது26) என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். அங்கிதாவும் டாக்டராக இருந்து வந்தார். கடந்த மாதம் 30-ந்தேதி பணி முடிந்து நிகில் வீடு திரும்பினார். அப்போது செல்போனில் அழைப்பு வந்தது. இதில் பேசிய அங்கிதாவுடன் சிறு பிரச்சனை காரணமாக வாக்குவாதம் ஏற்பட்டது.

இதன்பின்னர் அழைப்பை துண்டித்து விட்டார். சிறிது நேரம் கழித்து டாக்டர் நிகில் வீட்டிற்கு சென்று கதவை தட்டி உள்ளார்.

கதவை திறக்காததால் மாற்று சாவி மூலம் திறந்து வீட்டிற்குள் சென்றார். அப்போது படுக்கை அறையில் உள்ள மின்விசிறியில் அங்கிதா தூக்கில் பிணமாக தொங்கி கொண்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இதுபற்றி அவர் யாரிடமும் தெரிவிக்காமல் இரவு முழுவதும் அங்கிதாவின் உடலுடன் தங்கி இருந்தார். பின்னர் நேற்று காலை நிகிலும் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் பற்றி அறிந்த அக்கம்பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று 2 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அறையில் போலீசார் நடத்திய சோதனையில் கடிதம் எதுவும் சிக்கவில்லை. இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து தம்பதி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். டாக்டர் தம்பதி தற்கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Contact Us