புதிய தத்துவத்துடன் கிளர்ந்தெழுந்த வனிதா; பரபரப்பாகி கடிதம்; நடந்தது என்ன?

சென்னை: வனிதா பிக் பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியிலிருந்து விலகியது இப்போது பரபரப்பாகி விட்டது. ஆனால் பிக்பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் இருந்து விலகியதற்கு விளக்கத்தை கொடுத்திருக்கிறார் வனிதா விஜயக்குமார்.

வனிதா விஜயக்குமாரின் விளக்கத்தைத் தொடர்ந்து அவருக்கு ரசிகர்கள் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

பரபரப்புகள் சர்ச்சைகளுக்கும் பரபரப்புக்கும் பஞ்சம் இல்லாதவர் வனிதா. சில மாதங்களாக அமைதியாக போய்க்கொண்டிருந்த இவருடைய வாழ்க்கையில் மீண்டும் ஒரு பெண்ணால் மனக் கஷ்டமும் பெரும் நெருக்கடியும் ஏற்பட்டதாக குமுறியுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அதுவும் வேலை செய்யும் இடத்தில் இப்படி எல்லாம் ஒருவர் பண்ணவே கூடாது என ரொம்பவே பீல் பண்ணி இன்ஸ்டாகிராமில் போஸ்ட் போட்டிருக்கிறார்.

ஆதரவைக் குவிக்கும்

ரசிகர்கள் இவருடைய போஸ்டை பார்த்ததும் இவருடைய ரசிகர்கள் இவருக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர் .ஆனாலும் யாரந்த பெண் என்று சொல்லாமலே பெரிய விளக்கத்தை கொடுத்திருக்கிறார் .இதை பார்த்ததும் ரசிகர்கள் அவராக இருக்குமோ இவரா இருக்குமோ என்று கமெண்ட் களில் சந்தேகத்தை கேட்டு வருகின்றனர். விஜய் டிவியில் தொடர்ச்சியாக பல்வேறு நிகழ்ச்சிகளில் பணியாற்றிவருகிறார் வனிதா விஜயகுமார். என்ன நழுவுது ?..

குக் வித் கோமாளி பிக் பாஸ் சீசன் 3, குக் வித் கோமாளி சீசன் 1 ,கலக்கப்போவது யாரு ,பிக் பாஸ் ஜோடிகள் என அடுத்தடுத்து தொடர்ந்து பணியாற்றியுள்ளார். இதில் பிக்பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சி தற்போது ஒளிபரப்பாகி வருகிறது .இந்நிலையில் அவர் தற்போது தன்னுடைய டுவிட்டர் இன்ஸ்டாகிராம் தளத்தில் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தான் அந்த நிகழ்ச்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார் .

தொடர்ந்து அவமானம் என்னை அவமானப்படுத்துவது ,கொடுமைப்படுத்துவது முதலியவற்றை நான் தொடர்ந்து எதிர்கொண்டு வருகிறேன் .எனது குடும்பமாக இருந்தாலும் அதனை ஏற்றுக் கொள்ள மாட்டேன் என்பதை உலகமே அறியும். பிக்பாஸ்-3 நிகழ்ச்சிக்கு பிறகு விஜய் தொலைக்காட்சி எனக்கு மற்றொரு வீடாக இருந்து வருகிறது. விஜய் டிவியோடு எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை .ஆனால் அங்கு வேலை செய்யும் இடத்தில் மோசமான தாக்குதல்களையும் நெறியற்ற நடவடிக்கைகளையும் என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது. அநீதி என்னுடைய தொழிலின் வளர்ச்சியை பொறுத்துக் கொள்ள முடியாத சிலரால் நான் அவமானப்படுத்தப்பட்டதோடு எனக்கு அநீதி இழைக்கப்பட்டது. வேலை செய்யும் இடங்களில் பெண்களை மோசமாக நடத்துவது ஆண்கள் மட்டுமல்ல சில பொறாமை பிடித்த பெண்களும் அப்படியே நடந்து கொள்கிறார்கள் .பொதுவாக பெண்களுக்கு பெண்கள் தான் எதிரியாக இருந்து வருகிறார்கள். கிடைக்கும் வாய்ப்புகளை ஒழிக்க வரிந்து கட்டிக் கொண்டு வருகிறார்கள்.

அனுபவம் வாய்ந்த சீனியர்

ரொம்ப வருஷமா அனுபவமான சீனியர் ஒருவர் தன்னை விட வயது குறைந்தவர்களிடம் இப்படி நேர்மை இல்லாமல் நடந்து கொள்வது எனக்கு வேதனை ஆக இருக்கிறது .வாழ்க்கை முழுவதும் இன்னல்களை சந்தித்து தற்போது ஆண் துணையின்றி மூன்று குழந்தைகளை வளர்க்கும் தாய் நான். ஆனாலும் எனக்கு ஆதரவாக நிற்கவில்லை என்றாலும் பரவாயில்லை, வாழ்க்கையை மோசமாக மாற்றுவது ஒரு பெண்ணாக இருப்பது தான் வேதனையாக இருக்கிறது என்று கூறியிருக்கிறார்.

சுரேஷ் சக்கரவர்த்திக்கு நன்றி

பிக்பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் பங்குபெறும் மற்ற போட்டியாளர்களுக்கு என்னுடைய வாழ்த்துக்கள் . வெற்றியை விடவும் போட்டியில் பங்கேற்கும் சவால்களை எதிர்கொள்வது எனக்கு அதிக முக்கியத்துவம் வாய்ந்தவை .என்னால் இந்த போட்டியில் இருந்து விலகிய சுரேஷ் சக்கரவர்த்தியிடம் மன்னிப்பு கேட்கிறேன் .இந்த முடிவை எடுப்பதற்காக தொழில் நேர்த்தியோடு என்னுடன் நின்றவர் அவர் ஒருவர்தான். அதனால் என்னால் நீங்களும் இந்த நிகழ்ச்சியை விட்டு நீங்க வேண்டியுள்ளது ஆகிவிட்டது .ஆனால் என்னுடைய முடிவுக்கு ஆதரவு கொடுத்த நீங்கள் உண்மையான நண்பர் என்று கூறியிருக்கிறார். ரசிகர்கள் கொதிப்பு தற்போது இவருடைய இந்த போஸ்ட்டை பார்த்து கொதித்தெழுந்து அவருடைய ரசிகர்கள் அப்படி என்றால் நீங்கள் ரம்யா கிருஷ்ணனை தானே சொல்லுகிறீர்கள் என கமெண்ட் களில் கேட்டு வருகின்றனர். ஆனால் அதற்கு வனிதாவின் தரப்பிலிருந்து எந்த பதிலும் கொடுக்கவில்லை என்பதால் தற்போது இவருடைய இந்த போஸ்ட் தான் வைரலாக பரவி வருகிறது .எப்போதுமே வைரலுக்கு பஞ்சமில்லாத இவர் தற்போது மீண்டும் வைரலாக வலம் வருகிறார்.

 

Contact Us