ஆகா…! ‘இப்படி’ இரு திட்டமா…? ‘இனி மதுப்பிரியர்கள் கூட்டம் அள்ளுமே…

இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இதுவரை கொடுக்காத புதுவித இலவச அறிவிப்பை தெலுங்கானா மாநிலம் வெளியிடப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது. கொரோனா ஊரடங்கு காலத்தில் இந்தியாவின் அனைத்து மாநிலங்களும் பல நாட்கள் மதுபானக் கடைகள் மூடப்பட்டிருந்தன. இந்நிலையில் ஒரு சிலர் தங்களுடைய குடிப்பழக்கங்களில் இருந்து விடுபட்டதும், ஒரு சிலர் எப்போது மதுபானக் கடைகள் திறக்கும் என காத்திருந்தது அனைவரும் அறிந்தது.

தற்போது தெலுங்கானா அரசு வித்தியாசமான முயற்சியை மதுபானங்களை இலவசமாக கொடுக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்த கொரோனா காலத்தில் மதுபான விற்பனை குறைந்த நிலையில் அதனை மீண்டும் அதிகரித்து மக்கள் மதுக்கடைகளுக்கு செல்வதை ஊக்குவிக்கும் வகையில் இந்த முயற்சி எடுக்கப்படுவதாக கூறப்படுகிறது

மேலும், இந்த இலவச மதுபானம், உரிமம் பெற்ற மதுக்கடையில் வாரம் ஒரு நாள் இலவசமாக வழங்கப்படும் எனவும் கூறப்படுகிறது.

இவை டோக்கன் விநியோகிக்கப்பட்டு, அதன் பின்னர் குறிப்பிட்ட அளவுக்கு இலவசமாக மது வழங்கப்படும் என தெரிகிறது. இந்த புதிய திட்டம் விரைவில் அமலுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பொதுவாக அரசு மக்கள் நலன் சார்ந்த பொருட்களை இலவசமாக வழங்கும். தமிழகத்தில் டிவி, மிக்சி, மின்விசிறி, ஆடுகள் போன்றவையும், பள்ளி மாணவர்களுக்கு லேப்டாப், சைக்கிள் இலவசமாக வழங்கப்பட்டு வந்த நிலையில் இதுபோன்ற அறிவிப்பு மக்களிடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

Contact Us