நயன்தாராவின் தந்தை மருத்துவமனையில் அனுமதி!

நடிகை நயன்தாராவின் தந்தை கேரளாவில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சற்றுமுன் செய்திகள் வெளியாகியுள்ளது. தமிழ் தெலுங்கு மலையாள திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவர் நயன்தாரா. இவர்தான் தென்னிந்தியாவிலேயே அதிகமான சம்பளம் வாங்குபவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் நயன்தாராவின் தந்தை கடந்த சில நாட்களாக உடல் நலக்குறைவால் இருந்ததால் அவ்வப்போது அவர் கொச்சி சென்று தனது தந்தையை சந்தித்து நலம் விசாரித்து வந்தார்.

இந்த நிலையில் நயன்தாராவின் தந்தையின் உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் மருத்துவர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வருவதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன. இதனை அடுத்து நயன்தாராவின் ரசிகர்கள் அவர் விரைவில் குணமாக வேண்டும் என்று வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

ஏற்கனவே மிக விரைவில் நயன்தாரா – விக்னேஷ் சிவன் திருமணம் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் திடீரென நயன்தாராவின் தந்தை உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளது அவரது குடும்பத்தினருக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது

Contact Us