அடுத்த போராட்டங்கள் ரெடி; பரபரப்பை ஏற்படுத்தியுள்ள தேரர்; கோத்தாவிற்கு அடுத்தடுத்து சோதனை!

பௌத்த புராதனச் சின்னங்கள் மற்றும் தொல்பொருட்களை பாதுகாப்பதாகக் கூறி ஆட்சிக்குவந்த ஸ்ரீலங்கா அரசாங்கத்தின் ஆட்சியிலும், தொல்பொருள் சின்னங்கள் அழிக்கப்பட்டு வருவதாக பரபரப்பு குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

சிங்கள ராவய அமைப்பின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான அக்மீமன தயாரத்ன தேரர் கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது இந்தத் தகவலை வெளியிட்டார்.

மிஹிந்தலை பிரதேசத்தில் மதவாச்சி வீதியில் அனுலாதேவியின் சின்னம் வைக்கப்பட்டுள்ள பெறுமதிவாய்ந்த தொல்பொருள் காணி உள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்னர் இந்த இடம் முற்றாக இடிக்கப்பட்டுள்ளது.

கொழும்பிலுள்ள பிரபல வர்த்தகர் ஒருவரே இதற்கான உதவிகளை வழங்கியுள்ளார். கடந்த 02ஆம் திகதி இதுபற்றி மிஹிந்தலை காவல்நிலையத்தில் முறையிடப்பட்டுள்ள போதிலும் அதனை ஸ்ரீலங்கா காவல்துறையினர் ஏற்றுக்கொள்ளவில்லை.

ஸ்ரீலங்காவில் பெண்கள் மத்தியில் முதலாவதான காவியுடையை அணிந்துகொண்ட அனுலாதேவி என்பவருடைய நினைவுச்சின்னம் இடித்து அழிக்கப்பட்டுள்ளது.

Contact Us