இந்தியாவில் 13,500 கோடி ரூபாய் மோசடி செய்த…’ மெகுல் சோக்ஸி டோமினிகா சிறையில் இருந்து ரிலீஸ் செய்யப்பட்டாரா…? – வெளியாகியுள்ள பரபரப்பு தகவல்…!

இந்தியாவில் வங்கி கடன் பெற்றுக்கொண்டு மோசடி செய்யப்பட்டதாக தேடப்பட்ட வைர வியாபாரி மெகுல் சோக்ஸி டோமினிகா சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டு ஆண்டிகுவா பார்புடா திரும்பியுள்ளார்.

mehul choksi released prison returned to Antigua Barbuda

இந்தியாவில் இருந்து தப்பித்து சென்ற பின்னர் மெகுல் சோக்ஸி ஆண்டிகுவாவில் கடந்த 2018-ஆம் ஆண்டு முதல் வசித்து வருகிறார். அதன் அருகில் உள்ள டோமினிகா தீவில் இருப்பதாக தகவல் வெளியானதை ஒட்டி கடந்த மே மாதம் கைது செய்யப்பட்டு சிறையில் தள்ளப்பட்டார்.

இது அவரை இந்தியாவிற்கு கொண்டுவர மேற்கொள்ளப்படும் முயற்சிகளுக்கு பின்னடைவாக கருதப்படுகிறது. அவர் இந்தியாவில் வங்கிகளில் சுமார் 13,500 கோடி ரூபாய் கடன் பெற்று மோசடி செய்ததாக தேடப்பட்டு வருபவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Contact Us