டேனிஷ் சித்திக் மரணத்தில் மர்மம்!.. முன் கூட்டியே திட்டமிடப்பட்டதா?.. நடுங்கவைக்கும் புதிய தகவல்!

இந்தியப் புகைப்படக் கலைஞர் டேனிஷ் சித்திக் கொல்லப்பட்டது எப்படி என்று திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது.

danish siddiqui taliban executed after verifying report

புலிட்சர் விருது வென்ற ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தின் இந்தியப் புகைப்படக் கலைஞர் டேனிஷ் சித்திக், கடந்த 16ம் தேதி ஆஃப்கானிஸ்தான் படையினருக்கும், தாலிபான் பயங்கரவாதிகளுக்கும் இடையே நடைபெற்ற போரைப் படம் பிடித்துக்கொண்டிருந்தபோது துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தார். அவரின் மரணம் சர்வதேச அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது.

முன்னதாக, டேனிஷ் சித்திக் கொல்லப்பட்டது குறித்து பேட்டியளித்த தாலிபான் செய்தித் தொடர்பாளர், “டேனிஷ் சித்திக் யாருடைய தாக்குதலின்போது துப்பாக்கிச்சூட்டில் கொல்லப்பட்டார் என்பது எங்களுக்குத் தெரியாது. அவர் எப்படி இறந்தார் என்பதும் எங்களுக்குத் தெரியாது. எங்களை மன்னித்து விடுங்கள்” என்று கூறியிருந்தார்.

இந்நிலையில், டேனிஷ் சித்திக் எப்படி கொல்லப்பட்டார் என்பது குறித்து புதிய தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்காவைச் சேர்ந்த ‘வாஷிங்டன் எக்ஸாமினர்’ செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள தகவலின்படி, “ஸ்பின் போல்டாக் பகுதியில் டேனிஷ் சித்திக் ராணுவத்தினருடன் சென்று கொண்டிருந்த போது, தாலிபன்கள் தாக்கியதால் காயம் அடைந்தார். இதையடுத்து அவர் அங்குள்ள மசூதி ஒன்றில் தஞ்சம் புகுந்தார்.

டேனிஷ் சித்திக் அங்கு இருப்பதை அறிந்த தாலிபன்கள் அவருடைய அடையாள அட்டையைப் பரிசோதித்துள்ளனர். பிறகு, அந்த மசூதி மீது தாக்குதல் நடத்தி டேனிஷ் சித்திக்கைப் பிடித்து கொடூரமான முறைகளில் துன்புறுத்தி சுட்டுக் கொன்றனர். அவரைக் காப்பாற்ற முயன்ற ஆஃப்கான் தளபதியும் அவரது அணியினரும் தாலிபன்களால் கொடூரமாகக் கொல்லப்பட்டனர்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Contact Us