பிரபல நாடொன்றின் சர்வதேச விமான நிலையத்தில் ட்ரோன் தாக்குதல்; எட்டு பேர் காயம்

 

சவுதி அரேபியாவின் அபா விமான நிலையத்தில் இன்று நடந்த ட்ரோன் தாக்குதலில் எட்டு பேர் காயமடைந்ததுள்ளதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனிடையே அபா சர்வதேச விமான நிலையத்தைத் தாக்க முயன்ற இரண்டாவது ட்ரோன் இடைமறித்து சுட்டு வீழ்த்தப்பட்டதாக சவுதி தலைமையிலான கூட்டணி தெரிவித்தது. சவுதி அரேபியா 2015 ஆம் ஆண்டில் இருந்து ஏமன் நடந்து வரும் உள்நாட்டு போரில் தலையிட்டுள்ளது. ஹுத்தி தலைநகர் சனாவைக் கைப்பற்றி உள்ளது.

இந்த சூழலில் ஈரான் ஆதரவுடன் போரில் பங்கேற்றுள்ள ஹூத்தி கிளர்ச்சியாளர்கள் பலமுறை எல்லை தாண்டிய தாக்குதல்களை சவுதி அரேபியா மீது நடத்தி வருகின்றது. இந்த தாக்குதலில் பயணிகள் விமானம் ஒன்று சேதமடைந்துள்ளது. எனினும் இந்த தாக்குதலுக்கு ஹவுதி அமைப்பினர் பொறுப்பேற்கவில்லை.

இதேவேளை , அந்த அமைப்பினர் தான் சவுதியில் டுரோன் மூலம் தாக்குதல் நடத்துவதை வழக்கமாக வைத்துள்ளனர்.

Contact Us