தலிபான்கள் அரசின் உச்சபட்ச தலைவராக மூத்த மத தலைவர் தேர்வு!

 

ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சியை கைப்பற்றி உள்ள நிலையில் தங்கள் அரசின் உச்சபட்ச தலைவராக மூத்த மத தலைவரான முல்லா ஹெபத்துல்லா அகுந்த்ஸடாவை ( Mulla Hepatullah Akundsada) (வயது 60) தேர்ந்தெடுத்து உள்ளனர். இவர் காந்தஹாரில் இருந்து செயல்படுவார். இதனையடுத்து, பலுசிஸ்தான் மாகாணத்தின் கச்லாக் பகுதியில் உள்ள ஒரு மசூதியில் 15 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். மேலும், புதிய அரசாங்க அமைப்பின் கீழ், ஆளுநர்கள் மாகாணங்களை கட்டுப்படுத்துவார்கள், அதே நேரத்தில் மாவட்ட ஆளுநர்கள் அந்தந்த மாவட்டங்களுக்கு பொறுப்பாக இருப்பார்கள் என்று சமங்கனி கூறினார்.

இதேவேளை தலிபான்கள் ஏற்கனவே மாகாணங்கள் மற்றும் மாவட்டங்களுக்கு ஆளுநர்கள், பொலிஸ் தலைவர்கள் மற்றும் காவல் தளபதிகளை நியமித்துள்ளனர். அதேநேரம் புதிய நிர்வாக அமைப்புக்கான பெயர், தேசியக்கொடி மற்றும் தேசிய கீதம் ஆகியவை இன்னும் முடிவு செய்யப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து, தோஹாவில் உள்ள தலிபான் அரசியல் அலுவலகத்தின் துணைத் தலைவர் ஷேர் முகமது அப்பாஸ் ஸ்டானிக்ஸாய் (Sher Mohammad Abbas Stanikzai) வியாழக்கிழமை வெளிநாட்டு ஊடகங்களிடம், ஆப்கானிஸ்தானில் உள்ள அனைத்து பழங்குடியினரையும் சேர்ந்த உறுப்பினர்கள் புதிய அரசு அமைப்பில் ஒரு பகுதியாக இருப்பார்கள் என்று கூறினார்.

இதேவேளை கடந்த 20 ஆண்டுகளில் ஆப்கானிஸ்தானின் முன்னாள் அரசாங்கங்களின் ஒரு பகுதியாக இருந்த எந்த நபரும் புதிய தாலிபான் நிர்வாகத்தில் சேர்க்கப்பட மாட்டார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Contact Us