‘மரணத்தை தழுவுவது மேல்’…. ஆளுநர் வளாகத்திற்கு முன்பாக…. போராடிய ஆப்கான் பெண்கள்….!!

 

ஆப்கானிஸ்தான் நாட்டின் முழு அதிகாரமும் தலீபான்களின் கையில் சிக்கியுள்ளது. இதனால் அங்குள்ள மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. அதிலும் குறிப்பாக பெண்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது. இந்த நிலையில் ஹெராட் மாகாண ஆளுநர் வளாகம் முன்னால் பெண்கள் ஆர்ப்பாட்டம் செய்துள்ளனர்.

மேலும் அவர்கள் ஆப்கானிஸ்தானில் உள்ள பெண்கள் மற்றும் சிறுமிகளின் உரிமைகளுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் முழக்கமிட்டனர் மேலும் கல்வி, வேலை போன்ற பெண்களின் முக்கிய உரிமைகளுக்காவும் போராடினர். அந்த போராட்டத்தில் கலந்து கொண்ட ஒரு பெண் கூறியதில் “வீட்டில் பெண்கள் அடிமையாய் வாழ்வதை விட மரணத்தை தழுவுவது மேல்” என்று கூறியுள்ளார்.

Contact Us