பெரும் லாபத்தை ஈட்டியுள்ள பிரித்தானிய நிகழ்நிலை சூதாட்ட நிறுவனம் 888

 

பிரித்தானியாவின் ஒன்லைன் சூதாட்ட குழுமம் 888 ஒருபோதும் இல்லாத அளவு முதல் கால் ஆண்டில் பெரும் லாபத்தை ஈட்டியுள்ளதாக இன்று புதன் அறிவித்துளள்ளது. இதற்கு காரணம் முடக்க காலத்தில் பெரும் பாலானோர் ஒன்லைன் மூலம் சூதாட்ட நடவடிக்கையில் ஈடுபட்டது மற்றும் யூரோ 2020 கால்பந்து சாம்பியன் ஷிப் போட்டிகள் என்று தெரிவித்துள்ளது.

அந்த நிறுவனம் 39 விகித உயர்வு ஏற்பட்டுள்ளது என்றும் வருமானம் 97.4 மில்லியன் டாலர் சரிசெய்யப்பட்டது என்றும், இது ஜூன் வரையான ஆறு மாதகாலத்துக்கானது என்றும் அறிவித்துள்ளது. அந்த நிறுவனத்தின் மொத்த வருமானம் 39 விகிததால் அதிகரித்து 528.4 மில்லியன் டொலர்களாக இருந்தது. இதனால் 888 தனது வருடாந்த வருமானம் எதிர்பார்த்ததை விட சற்று அதிகமாக இருக்கும் என்றும் கூறியுள்ளது.

Contact Us