TV ஐ பார்த்த போது தனது மகளும் பேரப் பிள்ளையும் இறந்தது தெரிய வந்தது: அப்பாவின் சோகம் !

 

பெரும் விபத்து ஒன்று இடம்பெற்றுள்ளது என்று, TVல் ஒரு செய்தி காண்பிக்கப்பட்டது. அதனைப் பார்த்த றொலாண்டோ என்ற நபர், இது எங்கள் வீட்டார் பாவிக்கும் கார் ஆச்சே என்று கதி கலங்கினார். ஆனாலும் உறுதியாக தெரியவில்லை. தன்னுடைய வீட்டாராக இருக்க கூடாது என்று அவர் கடவுளை பிரார்த்தனை செய்து கொண்டு இருக்கையில், பொலிசார் அவரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு, பெரும் பள்ளத்தாகில் வீழ்ந்தது அவரது குடும்பத்தார் பயணித்த கார் தான் என்று கூறியுள்ளார்கள். இதில் அல்மா என்ற 12 வயது சிறுமி மற்றும் அகஸ்டின் என்ற 16 வயதுப் பெண் இறந்துள்ளார்கள். காரை ஓட்டிச் சென்ற நபர்..

மற்றும் அவரது காதலி ஆகியோர் உயிர் பிழைத்துள்ளார்கள். ஆஜன்டினா நாட்டில் இந்த கொடூர சம்பவம் இடம்பெற்றுள்ளது என அதிர்வு இணையம் மேலும் அறிகிறது.

Contact Us