ஒலிம்பிக்கில் பதக்கத்தை இழந்த பவானி தேவி.. தங்க செயின் கொடுத்த பிரபல நடிகரின் வைரல் போட்டோ

சுப்ரமணியபுரம், நாடோடிகள் வாயிலாக தனக்கென ரசிகர் வட்டத்தை உருவாக்கியவர் சசிகுமார். மண்மணம் மாறாத சினிமா வாயிலாக ரசிகர்கள் மனதில் குடி கொண்டவர். இயக்குனர், நடிகர், தயாரிப்பாளர் என்பதனை விட நல்ல மனிதர் என பெயர் எடுத்தவர். இவரது எளிமை மற்றும் அன்பு அனைவருக்கும் பிடித்த ஒன்று.

வெற்றி பெற்றவர்களை அனைவரும் கொண்டாடுவதும், தோல்வி அடைபவர்களை புறக்கணிப்பது இயல்பு தான். இந்நிலையில் கத்துக்குட்டி படத்தை இயக்கிய சரவணன், ட்விட்டரில் பதிவிட்ட நிகழ்வு ஒன்று வைரலாகி வருகிறது.

வாள்வீச்சு வீராங்கனை பவானி தேவி கிரிக்கெட் வீரர்கள் அளவுக்கு பிரபலம் இல்லாதவர் தான், எனினும் திறன் வாய்ந்தவர். சமீபத்தில் நடந்து முடிந்த ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொண்டார், எனினும் பதக்க வாய்ப்பை இழந்தார்.

இந்நிலையில் நடிகரும், இயக்குனருமான சசிகுமார், வாள்வீச்சு வீராங்கனை பவானி தேவியை நேரில் சந்தித்து அவருக்கு தங்க செயின் அணிவித்து பாராட்டி உள்ளார். இந்த இயல்பு தான் சசிகுமாரை பலரும் பாராட்ட வைக்கிறது.

Contact Us