பிளான் போட்டு மாஸ் ஹீரோ பட வாய்ப்பை தட்டி தூக்கிய விருது நடிகை

 

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தான் அந்த மாஸ் நடிகர். அவரது படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்து வருகிறது. அவரது படத்தில் நடித்தால் நிச்சயம் முன்னணி நடிகையாக வலம் வரலாம் என பல நடிகைகள் மாஸ் நடிகரின் பட வாய்ப்புக்காக ஏங்கி கொண்டிருக்கின்றனர்.

இதுவரை தமிழில் மட்டும் நடித்து வந்த அந்த மோசடிகள் முதல் முறையாக அக்கட தேசத்தில் புதிய படம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியாக இருந்தாலும் தயாரிப்பாளர்களுக்கு சற்று வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது. இருப்பினும் படம் குறித்த அதிரடியான அப்டேட்டுகள் அடுத்தடுத்து வெளியாகி ரசிகர்களை திக்குமுக்காட செய்து வருகிறது.

மாஸ் நடிகரின் புதிய படத்தில் அவருடன் ஜோடி சேர உள்ளார் நடிகை யார் என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் மாஸ் நடிகருடன் ஏற்கனவே இரண்டு முறை ஜோடி சேர்ந்து நடித்துள்ள அந்த விருது நடிகை தற்போது மூன்றாவது முறையாக ஜோடி சேர நடிகருக்கு தூண்டில் போட்டுள்ளாராம்.

தற்போது அந்த விருது நடிகைக்கு கோலிவுட்டில் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு பட வாய்ப்புகள் இல்லை. எனவே மாஸ் நடிகருடன் மீண்டும் நடித்தால்தான் இழந்த மார்க்கெட்டை திரும்ப பெற முடியும் என நினைத்த விருது நடிகை மாஸ் நடிகர் படத்தில் நடிக்க பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறாராம்.

மாஸ் நடிகரிடம் நேரடியாக கேட்டால் வாய்ப்பு கிடைக்காது என்பதால், டோலிவுட் தயாரிப்பாளரை மறைமுகமாக சந்தித்து பேசிய விருது நடிகை எப்படியோ அவரை சம்மதிக்க வைத்து விட்டாராம். மேலும் தனக்கான சம்பளத்தை தாராளமாக தர தயாரிப்பு நிறுவனம் சம்மதம் கூறியதால் மாஸ் நடிகரும் அந்த படத்தில் நடிக்க ஓகே சொல்லி விட்டாராம்.

மாஸ் நடிகரின் புதிய படத்தில் சில ஹிந்தி நடிகைகளின் பெயர்கள் அடிபட்டு வந்த நிலையில் தற்போது விருது நடிகை தான் மாஸ் நடிகரின் அடுத்த படத்தில் அவருக்கு ஜோடியாக இணைந்து நடிக்க போகிறாராம். இருப்பினும் விருது நடிகை தற்போது உடல் எடையை குறைத்து மெலிந்து காட்சி அளிப்பதால், ரசிகர்கள் ஏற்று கொள்வார்களா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

எனவே அந்த பிரச்சனையை சமாளிக்க இன்னொரு பிரபல பாலிவுட் நடிகையை படத்தில் களமிறக்கி கவர்ச்சி விருந்து கொடுத்து சமாளிச்சிடலாம் என படக்குழு திட்டமிட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. எப்படியோ அந்த நடிகை பிளான் போட்டு மாஸ் ஹீரோ பட வாய்ப்பை தட்டி தூக்கிட்டாங்களே என மற்ற நடிகைகள் வயிற்றெரிச்சலில் உள்ளார்களாம்.

Contact Us