பலவந்தமாக வீட்டிற்குள் நுழைந்து ஒருவர் அடித்துக் கொலை

 

பதுளை, லிதமுள்ள பகுதியில் வீட்டிற்குள் பலவந்தமாக நுழைந்து ஒருவர் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவத்தில் அடித்துக்கொல்லப்பட்ட நபர் இரும்புக் கம்பியால் தாக்கப்பட்டார் என தெரியவந்துள்ளது. மேலும் பலமாக தாக்கப்பட்ட நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நபரானவர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.

உயிரிழந்த நபருக்கு சுமார் 65 வயதிருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கொலை தொடர்பில் 21,24 மற்றும் 31 வயதுடைய நபர்கள் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Contact Us