“உன்னை காதலிச்சிட்டு உன் அண்ணனோட தூங்கணுமா ….”ஒரு காதலிக்கு காதலனால் நேர்ந்த விபரீதம்

 

தன் காதலியை தன் சகோதரன் மற்றும் நண்பரோடு தூங்க சொன்னதற்கு மறுத்த காதலியை தாக்கிய நபரை போலீஸ் கைது செய்தது

பஞ்சாப் மாநிலம் மொஹாலியில் உள்ள நாயகானில் வசிக்கும் ஒரு 25 வயதான வாலிபர் சன்னி என்கிளேவில் உள்ள கராறில் வசிக்கும் ஒரு பெண்ணை காதலித்து வந்தார் .ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றும் அந்த பெண்ணும் அவரை காதலித்தார் .ஆனால் அந்த காதலனுக்கு வேலையில்லை, மேலும் அவர் குடிக்கு அடிமையானவர் .

இந்நிலையில்,அந்த காதலன் அந்த பெண்ணை கடந்த சனிக்கிழமை நாயக்கனில் உள்ளஒரு ஹோட்டலுக்கு கூட்டி சென்றார் .அப்போது அவர் நல்ல குடிபோதையில் இருந்தார் .அதன் பின்னர் அவர் அந்த பெண்ணை அந்த ஹோட்டல் ரூமில் இருக்கும் தன்னுடைய அண்ணன் மற்றும் அவரின் மற்றொரு நண்பரோடு சென்று தூங்குமாறு கூறினார் .

அதை கேட்ட அந்த பெண் அதற்கு மறுத்தார் .மேலும் அங்கிருந்து தப்பியோட முயன்றார் .அதனால் அந்த காதலன் அந்த பெண்ணை அடித்து உதைத்தார் .அந்த ஹோட்டல் வாசலில் இந்த சம்பவம் நடந்தது .அந்த காதலனின் தாக்குதல் பொறுக்க முடியாத அந்த பெண் அங்கேயே மயங்கி விழுந்தார் .அதன் பிறகு அந்த காதலன் மற்றும் அவரோடு வந்தவர்கள் அங்கிருந்து தப்பியோடி விட்டனர் .அதன் பிறகு அந்த பெண் அங்குள்ள போலீஸ் ஸ்டேஷன் சென்று அந்த காதலன் மீது புகார் கொடுத்தார் .போலீசார் வழக்கு பதிந்து அந்த காதலனை கைது செய்து விசாரித்து வருகின்றனர்

Contact Us