இலங்கை சென்றுள்ள இந்திய வெளியுறவுத்துறை செயலர்… தமிழ் அமைப்பு தலைவர்களுடன் சந்திப்பு… வெளியான முக்கிய தகவல்..!!

 

இந்தியா இலங்கையில் உள்ள சிறுபான்மை தமிழ் சமூகத்தினுடைய உரிமைகளை 13-வது திருத்தத்தை அமல்படுத்துவதன் மூலம் நல்லிணக்கம் அடைய செய்வதற்கான உறுதிப்பாட்டை வழங்கியுள்ளது. அதாவது கடந்த சனிக்கிழமை அன்று நான்கு நாட்கள் பயணமாக இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் ஹர்ஷ வர்தன் ஷ்ரிங்லா இலங்கை சென்றிருந்தார். அங்கு ஹர்ஷ வர்தன் தமிழ் அமைப்பு தலைவர்களை நேரில் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

அந்த சந்திப்பின் போது ஹர்ஷ வர்தன் இலங்கையில் உள்ள தமிழ் சமூகத்தின் உரிமைகளுக்கான 13-ஆவது திருத்தத்தை முழுமையாக அமலுக்கு கொண்டு வருவது, நல்லிணக்கம், மாகாண சபை தேர்தலை முன்கூட்டியே சந்திப்பது ஆகியவற்றின் மூலம் தமிழர்களுடைய உரிமைகளை பாதுகாத்துக் கொள்வதற்கான உறுதிப்பாடுகள் குறித்து வலியுறுத்தியுள்ளார்.

Contact Us