“நல்லா யூஸ் பண்ணிட்டு இப்ப வேஸ்ட் மாதிரி என்னை ..”இசையமைப்பாளர் மீது பெண் புகார்

 

பாலிவுட்டில் பாடகர் மற்றும் இசையமைப்பாளர் ராகுல் ஜெயின் மீது கடந்த வாரம் ஒரு பெண் பாடலாசிரியர் தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி பாலியல் பலாத்காரம் செய்ததாக புகார் கொடுத்தார் .

பாலிவுட்டில் பிரபல பாடகர் மற்றும் இசையமைப்பாளர் ராகுல் ஜெயின் .இவர் பாலிவுட்டில் 2016 ஆம் ஆண்டு ஃபீவர் என்ற ஹிந்தி திரைப்படத்தில் ‘தெறி யாத்’ என்ற பாடலின் மூலம் அறிமுகமானார். அவர் 250 க்கும் மேற்பட்ட பாடல்களை இயற்றியுள்ளார்.

இந்நிலையில் 36 வயதான ஒரு பெண் தனது கணவர் மற்றும் குழந்தைகளுடன் மும்பைக்கு வந்து 2016 ஆம் ஆண்டில் ஜெயினை சந்தித்தார்.
அப்போது அந்த ஜெயின் அந்த பெண்ணுக்கு கணவனுடன் பிரச்சினை இருப்பதை அறிந்தார். அதைப் பயன்படுத்திக் கொண்டு, அவர் அந்த பெண்ணை அடைய நினைத்தார்

அதனால் ஜெயின் இந்த பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக கூறி உடல் உறவு கொண்டார் .2019 இல் ஜெயின் அந்த பெண்ணை , லோகந்த்வாலாவில் ஒரு வீட்டில் வாடகைக்கு குடி வைத்து , இருவரும் ஒன்றாக வாழத் தொடங்கினர். பின்னர் அந்த பெண்ணுக்கு ஒரு குழந்தை பிறந்துள்ளது .

இப்போது ஜெயின் தன்னை திருமணம் செய்ய மறுத்ததாகவும், வீட்டை விட்டு வெளியேறும்படி கட்டாயப்படுத்தியதாகவும் அந்த பெண் அவர் மீது குற்றம் சாட்டியுள்ளார்.அந்த பெண்ணின் புகாரின் பேரில் போலீசார் அவர் மீது பல பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர் .

Contact Us