“என் வீட்லே தங்கிட்டு என்னையே ..”ஒரு மாணவிக்கு வாலிபரால் நேர்ந்த கதி

 

மஹாராஷ்டிராவில் புனேயின் பிபேவாடி பகுதியை சேர்ந்த 14 வயது சிறுமி எட்டாம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் 22 வயதான சுபம் பகவத் என்ற அந்த சிறுமியின் துாரத்து உறவுக்கார வாலிபர் அவரது வீட்டில் தங்கிஇருந்தார்.அவர் அந்த சிறுமியை ஒருதலையாக காதலித்தார் . ஆனால் அவர் பலமுறை அவரிடம் தன்னுடைய காதலை சொல்லியும் தன் காதல் ஏற்கப்படாத ஆத்திரத்தில் அவர் இருந்தார்
இதற்கிடையே அந்த சிறுமி நேற்று முன்தினம் மாலை அங்குள்ள மைதானத்தில் கபடி விளையாட சென்றுள்ளார்.

அப்போது பைக்கில் அந்த பகவத் மூன்று டீனேஜ் நண்பர்களை அங்கு அழைத்து வந்தார் . அப்போது இரு சிறுவர்கள் பைக்கில் இருந்த நிலையில், மற்ற இருவரும் கூர்மையான ஆயுதங்களால் அந்த சிறுமியின் கழுத்து உட்பட பல்வேறு இடங்களில் குத்திக்கொலை செய்தனர்.இந்த கொலை பற்றி போலீசுக்கு தகவல் தேரிவிக்கப்ட்டதும் ,போலீசார் வழக்கு பதிவு செய்து நால்வரையும் கைது செய்தனர்.

“புனேயில் மாணவி கொல்லப்பட்டது மனித குலத்திற்கு அவமானம் விளைவிக்கும் கொடூர செயலாகும். சமூக சீரழிவின் தீவிர அறிகுறியான இதை வன்மையாக கண்டிக்கிறேன். இது போன்ற சமூக விரோத மனநிலையை முடிவிற்கு கொண்டு வரும் நடவடிக்கைகளை நாம் துவங்க வேண்டியது அவசியம்” என்று துணை முதல்வர் அஜித் பவார் வன்மையாக கண்டித்துள்ளார்.

Contact Us