கொட்டி தீர்த்த கனமழை…. வெள்ளத்தில் சூழ்ந்த வீடுகள்…. பிரபல நாட்டிற்கு வானிலை ஆய்வு மையத்தின் எச்சரிக்கை….!!

 

பிரிட்டனில் அடித்த கனமழையால் வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்ததால் நூற்றுக்கணக்கான மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். இந்நிலையில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால், ஸ்காட்லாந்து எல்லைப் பகுதிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதுடன், டம்ஃப்ரைஸ் அருகே உள்ள இரண்டு சாலைப் பாலங்கள் அடித்துச் செல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆகவே வெள்ளம் சூழ்ந்த வீடுகளில் இருந்து மக்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டுள்ளனர்.

மேலும் சாலை, ரயில் போக்குவரத்தும் முடங்கியுள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில், புதன் கிழமை நள்ளிரவு 1 மணி முதல் வியாழன் மாலை 6 மணி வரை கும்ப்ரியாவில் உள்ள ஹானிஸ்டர் பாஸில் 370 மிமீ மழை பதிவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த சூழலில் இங்கிலாந்தில் 65 வெள்ள எச்சரிக்கை விடப்பட்டதுடன், ஸ்காட்லாந்தில் 21 வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Contact Us