கடலுக்கு நடுவே தேன்றிய கருப்பு வளையம்- உண்மையில் அது என்ன என்று கண்டு பிடித்த கூகுள்..

பெரும்பாலான மக்களுக்கு, கூகுள் மேப்ஸ் என்பது ஒரு இடத்தில் இருந்து அவர்கள் செல்ல விரும்பும் மற்றொரு இடத்திற்கு நேரடியாக அழைத்துச் செல்வதற்கான வழியைத் தெளிவாகக் காண்பிக்கும் ஒரு பயனுள்ள கருவியாகும். ஆனால், ஆர்வமுள்ள ஒரு சில சிறிய குழுவினருக்கு, கூகிள் மேப்ஸ் மூலம் உலகைச் சுற்றிப் பார்ப்பது என்பது ஒரு பொழுது போக்கு அம்சமாக இருக்கிறது. இவர்களுக்குக் கூகிள் மேப்ஸ் மூலம் பூமியின் விசித்திரமான மர்மங்களைக் கண்டறிந்து அவற்றிற்கு ஆதாரம் தேடுவதே வேலையாகிவிட்டது. அப்படி சமீபத்தில், ஒரு ஆர்வமுள்ள நபர் கூகிள் மேப்ஸ் மூலம் பூமியின் வரைபடத்தைக் கண்காணித்த போது, நாடுகளுக்குள் ஒரு ராட்சத கருப்பு புள்ளியைக் கண்டிருக்கிறார்.

இந்த புகைப்படம் வைரலாக பரவ ஆரம்பித்து விட்டது. இதனால் கூகுள் மேப் மூலம் பலர் இந்த இடத்தைப் பார்வையிட ஆரம்பித்து விட்டார்கள். ஆனால் அது மக்கள் வாழாத ஒரு தீவு என்றும். அது பசுபிக் சமுத்திரத்தில் உள்ளது என்றும் கூகிள் நிறுவனம் தெரிவித்தாலும். கூகுளின் சாட்டலைட் கமரா இந்த தீவை சரியாக படம் பிடிக்கவில்லை என்ற உண்மையும் வெளியாகியுள்ளது. அது ஏன் என்ற மர்மம் தற்போது பரவலாக பேசப்பட்டு வருகிறது.

Contact Us