யாழ்ப்பாணத்தில் இப்படியும் ஒரு இளைஞன்!! நடந்தது என்ன?

நண்பர்களுடன் கொழும்பு சென்று திரும்பி வந்தபொழுது. எனது நண்பர் இரவு பத்து மணிக்கு கைதடி இலங்கை வங்கி கிளையில் பணம் எடுப்பதற்கு இறங்கிய போது தனது பணப்பையை தொலைத்துவிட்டார். பயணம் சோகத்தில் மூழ்கியது பணப்பையை கண்டேடுக்க முடியவில்லை எனினும் காலை வங்கி கிளை ஒன்றிலிருந்து அழைப்பு நீங்கள் அடையாள அட்டையை மற்றும் கிரடிட் காட் லைசென்ஸ் தொலைத் தீர்களா? ஆம் : இங்கே தங்கள் பொருட்களுடன் ஒரு இளைஞன் வந்துள்ளான்.

உடனே வங்கி கிளைக்கு சென்றார் எனது நண்பர். அந்த இளைஞன் சொன்னான் ஐயா ஏற்கனவே மூன்று வங்கி கிளைக்கு சென்றேன் அவர்கள் பொருட் படுத்தவில்லை இந்த கிளையினரும் உங்கள் நம்பரை தரவில்லை ஆனால் இணைப்பை ஏற்படுத்தி தந்தார்கள். நீங்கள் துன்பப்படகூடாது என்பதற்காக நான் விரைவாக உங்களிடம் சேர்க்க நினைத்தேன். நண்பர் கேட்டார் தம்பி என்ன செய்யிறாய் ஐயா நான் கூலி இண்டைக்கு வேலைக்கு போகாட்டியம் பறவாயில்ல இதை உரியவரிடம் சேர்க்க வேண்டும் என கூறினான்

இப்படியும் ஒருவன்– பாராட்டுவோம் +94 77 083 1459 Gnanenthiran மட்டுவில்

Contact Us