தொண்டு நிறுவனங்களில் பணியாற்ற பெண்களுக்கு அனுமதி மறுப்பு – தலிபான்கள்

 

ஆப்கானிஸ்தானில் தொண்டு நிறுவனங்களில் கள உதவியாளர்களாக பெண்கள் செயல்படவும் தலிபான்கள் தடை விதித்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது. தலிபான்கள் ஆட்சிக்கு வந்தபின் ஆப்கானிஸ்தான் பொருளாதாரம் நாளுக்கு நாள் பெரும் சரிவைச் சந்தித்து வருகிறது.

குறிப்பாக அத்தியாவசியப் பொருட்கள் கடும் விலை ஏற்றம், வேலைவாய்ப்பின்மை, வறுமை, பட்டினி போன்றவை ஆப்கானிஸ்தானில் மீண்டும் தீவிரமடைந்துள்ளது வரும் நிலையில் . ஐ.நா. மற்றும் உலக சுகாதார அமைப்பு மட்டும் மனிதநேய அடிப்படையில் உதவிகளை வழங்கி வருகின்றன.

இந்த மனிதநேய உதவியிலும், தொண்டு நிறுவனங்கள் சார்பில் செய்யப்படும் உதவியிலும் பெண்களைப் பயன்படுத்த தலிபான்கள் தடை விதித்துள்ளதாக டோலோ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது

இது குறித்து டோலோ செய்தி நிறுவனம் வெளியிட்ட செய்தியில், மனித உரிமை கண்காணிப்பாளர் ஹீதர் பார் கூறுவதாவது “ 34 மாகாணங்களில் 3 மாகாணங்களில் மட்டும்தான் பெண்களை களப்பணியாளர்களாக பணியாற்ற தலிபான்கள் அனுமதித்துள்ளனர்.மனித நேய உதவிகளைக் கூட பெண்களுக்கும், பெண் குழந்தைகளுக்கும் வழங்க முடியாத நிலையில்தான் இருக்கிறோம்.

பெண்கள் பணிக்குச் செல்ல வேண்டுமென்றாலும் ஆண்கள் துணைக்குச் செல்ல வேண்டிய சூழல் இருக்கிறது. இதனால் பெண்கள் தங்கள் பணிகளை சுதந்திரமாகச் செய்ய முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது எனத் தெரிவித்துள்ளார்.

மேலும் “ஆப்கானிஸ்தானில் செயல்படும் ஐ.நா சபை, உலக சுகதாார அமைப்பு ஆகியவற்றுடன் இணைந்து தலிபான்கள் செயல்பட வேண்டும். அவர்களுக்கு ஒத்துழைத்தால்தான், மக்களுக்குத் தேவையான அடிப்படை உதவிகள் தொடர்ந்து கிடைக்கும்” என ஆப்கன் மனித உரிமை ஆர்வலர் சோமன் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

Contact Us