“புலம்பெயர்ந்தோர் உயிரிழப்பை பிரான்ஸ் கண்டுகொள்ளவில்லை!”.. முதல் முறையாக கொந்தளித்த உள்துறை அலுவலர்கள்..!!

பிரிட்டனின் உள்துறை அலுவலர்கள், பிரான்ஸ் 54 மில்லியன் பவுண்டுகள் வாங்கிக்கொண்டு ஆங்கில கால்வாயை கடக்கும் புலம்பெயர்ந்தவர்களை தடுக்க சிறந்த நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை என்று கூறியிருக்கிறார்கள். 54 மில்லியன் பவுண்டுகளை பெற்றுவிட்டு 220 காவல்துறை அதிகாரிகளை மட்டும் பிரான்ஸ் எல்லையில் பணியமர்த்தியிருப்பதாக கூறியுள்ளார்கள்.

தற்போது வரை, பிரிட்டன் உள்துறை அலுவலர்கள் இது தொடர்பில் பொறுமை காத்து வந்தனர். தொடர்ச்சியாக பலி எண்ணிக்கை அதிகரித்து வருவதால் முதல்தடவையாக பிரான்ஸை எதிர்த்து அவர்கள் குரல் கொடுத்திருக்கிறார்கள். இது மட்டுமல்லாமல் பிரான்ஸ் பிரதமர் இம்மானுவேல் மேக்ரான் ஆங்கிலக் கால்வாயில் புலம்பெயர்ந்தோர் உயிரிழப்பதை பற்றி கவனத்தில் கொள்ளாமல் மீன்பிடி உரிமத்தின் மீதுதான் கவனமாக இருக்கிறார் என்றும் குற்றம் சாட்டியிருக்கிறார்கள்.

கடந்த புதன்கிழமை அன்று மட்டும் புலம்பெயர்ந்தோர் சுமார் 853 நபர்கள் 25 சிறிய படகுகளில் பிரிட்டனிற்குள் நுழைந்திருக்கிறார்கள். கடந்த வருடத்தில் பிரிட்டன் நாட்டிற்குள் சுமார் 8,410 புலம்பெயர்ந்தோர் நுழைந்திருக்கிறார்கள். இந்த வருடத்தில் தற்போது வரை பிரிட்டனிற்குள் 21,051 புலம்பெயர்ந்தோர் நுழைந்துவிட்டார்கள் என்று கூறப்பட்டிருக்கிறது.

Contact Us