கொழும்பில் அரசியல் பரபரப்பு -சஜித்தரப்புக்கு பச்சைக்கொடி காட்டிய முன்னாள் அரச தலைவர்

கொழும்பில் ஐக்கிய மக்கள் சக்தி ஏற்பாடு செய்த ஆர்ப்பாட்டத்தை தடுக்க காவல்துறையினரை அரசாங்கம் ஏவிவிட்டமைக்கு எதிராக இன்று நாடாளுமன்றத்தில் நடைபெற்ற ஐக்கிய மக்கள் சக்தியின் ஆர்ப்பாட்டத்தின் போது ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினரான முன்னாள் அரசதலைவர் மைத்திரிபால சிறிசேன(Maithripala Sirisena) எதிர்க்கட்சிகளுக்கு சமிக்ஞை வழங்கியதை காணமுடிந்ததாக சிங்கள ஊடகமொன்று தெரிவித்துள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்துமபண்டார(Ranjith Madhumabandara),இதன்போது அரசாங்கத்திற்கு எதிராக உரையாற்றுகையில் ஆளும் கட்சியில் அமர்ந்திருந்த மைத்திரிபால கைதட்டிக் கொண்டிருந்தார் என அந்த ஊடகம் தெரிவித்துள்ளது.

மத்துமபண்டாரவும் தனது உரையில் இவ்விடயத்தை மேற்காள் காட்ட தவறவில்லை எனவும் அந்த ஊடகம் மேலும் தெரிவித்துள்ளது.

Contact Us