கல்யாணத்துக்கு சென்ற பெண் -குடிபோதையில் வந்த கான்ஸ்டபிள் -அடுத்து பாத்ரூமில் நடந்த பயங்கரம்

உத்தரபிரதேச மாநிலம் மீரட்டில் 19 வயது பெண்ன்னொருவர் கடந்த வாரம் திங்கள்கிழமை இரவு தன்னுடைய பெற்றோர் மற்றும் உறவினர்களோடு அங்குள்ள ஒரு கல்யாண மண்டபத்தில் நடந்த உறவினரின் திருமண நிகழ்ச்சிக்கு சென்றார் .அப்போது அந்த பெண் பாத்ரூம் செல்ல அந்த மண்டபத்திலிருந்த கழிவரைக்குள் சென்றார் .அப்போது அந்த பாத்ரூம் இருக்கும் அறைக்கு அருகே ஒரு போலீஸ் கான்ஸ்டபிள் மது அருந்தி விட்டு இருந்தார்.

அதன் பிறகு அந்த பெண் நீண்ட நேரமாகியும் பாத்ரூமிலிருந்து வெளியே வராததை கண்டு அந்த பெண்ணின் உறவினர்கள் அதிர்ச்சியடைந்தனர் .அதனால் அந்த பெண் சென்ற பாத்ரூம் கதவை உடைத்து கொண்டு உள்ளே சென்று பார்த்த போது ,அங்கு அந்த பெண் இறந்த நிலையில் கிடப்பதை கண்டு அதிர்ச்சி யடைந்தனர்.

அதன் பிறகு அந்த பெண்ணின் உறவினர்கக்ள் அந்த பெண்ணின் சடலத்தை வைத்து கொண்டு இதற்கு யார் காரணம் என்று ஆராய்ந்தனர் .அப்போது அங்கே குடிபோதையிலிருந்த ஒரு போலீஸ்தான் அந்த பெண்ணை கெடுத்து விட்டு கொலை செய்து விட்டதாக சந்தேகப்பட்டு அவரை தாக்கினர் .பின்னர் போலீசார் அந்த இடத்திற்கு வந்து அந்த பெண்ணின் சடலத்தினை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர் .மேலும் அந்த பெண்ணின் உறவினர்கள் அந்த மண்டபத்திலுள்ள சிசிடிவி காட்சியை கேட்டதற்கு அவர்கள் தர மறுத்ததால் அவர்கள் நடவடிக்கை எடுக்க கோரி போராட்டம் செய்தனர் .இப்போது போலீசார் அந்த பெண்ணின் ப்ரேத பரிசோதனைக்கு காத்திருக்கின்றனர்.

Contact Us