நல்லூர் கோவிலை இடித்து மலசல கூடம் கட்டுவே என்ற காவாலி போதைப் பொருள் கடத்தல் வழக்கில் கைது: முருகனே விதித்த தண்டனை !

நல்லுார் கோவிலை இடித்து மலசலகூடம் கட்ட வேணும் என கூறிய ஆவா குழு காவாலி அருன்சித்தார் போதைப் பொருள் கடத்தலில் வசமாக சிக்கியுள்ளார் என அதிர்வு இணையம் அறிகிறது. இராணுவத்தின் முக்கிய புள்ளி என்று தன்னைத் தானே கூறிவருபவரும் போதைப்பொருள் கடத்தல்காரனும் , ஆவா குழுக் காவாலியுமான அருண் சித்தார்த்தன் யாழ்ப்பாணம் காவற்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். நீதிமன்ற பிடியாணை மூலம் யாழ்ப்பாணம் காவற்துறையினர் இன்று இவரை கைது செய்துள்ளனர்.பல குற்றச்செயல்களுடன் சம்பந்தப்பட்ட அருண் சித்தார்த்தன் ஊடகவியலாளர்களுடன் தகராறில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. அதேவேளை,

கைது செய்ய சென்ற யாழ்ப்பாணம் காவற்துறையினருடனும் முரண்பாட்டில் ஈடுபட்டதுடன், காவற்துறையினர் மீதும் தாக்குதல் மேற்கொள்ள முயன்றதாகவும், இராணுவத்தின் முக்கிய புள்ளி என்று தன்னை அடையாளப்படுத்திக் கொண்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இவர் நல்லூர் கோவிலை இடித்து ஆலய சூழலில் பொது மல சலகூடம் அமைப்பேன் என்றும் இந்து மதத்தை இழிவு படுத்தும் வகையில் கருத்துக்களை முன்வைத்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆனால் போதைப் பொருள் கடத்தலில் வசமாக சிக்கிக் கொண்டார். முருகனே இவருக்கு தக்க தண்டனையைக் கொடுத்து விட்டார். சில ராணுவத்தினர் இவருக்கு ஆதரவாக இருந்தார்கள் என்பது உண்மைதான். ஆனால் தற்போது கை விட்டு விட்டார்கள் போல இருக்கே ?

தாழ்த்தப்பட்ட மக்களின் பிரதிநிதி என தன்னைத்தானே தெரிவித்து யாழ்ப்பாணத்தில் சாதிப் பிரிவினைகளைத் துாண்டி வந்ததுடன் வறுமை நிலையில் வாழும் பெண்களை தவறான நடத்தைகளில் ஈடுபட வைத்ததுடன் கொழும்பில் இருந்து இதற்காகவே இவனைத் தேடி பல பிரமுகர்கள் யாழ்ப்பாணம் வந்து இவனைச் சந்தித்ததாகவும் அதிர்சசித் தகவல்கள் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது. இவனது கட்டுப்பாட்டில் 30ற்கும் மேற்பட்ட இளம்பெண்கள் தவறான நடத்தைகளில் ஈடுபட்டு வருகின்றார்கள் எனவும் பரபரப்புத் தகவல்கள் வெளியாகியிருந்தன.

Contact Us