லண்டனில் மீட்கப்பட்ட சடலம்… முதல் முறையாக வெளியான புகைப்படம்..!! யார் அந்த சிறுவன்..?

கடந்த வியாழக்கிழமை அன்று மாலை 6.40 மணி அளவில் லண்டனில் உள்ள West Croydon ரயில் நிலையம் அருகே கத்தியால் குத்தப்பட்ட நிலையில் சிறுவன் ஒருவன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் அந்த சிறுவனுடைய பெயர் Jermaine Cools என்பது தெரியவந்துள்ளது. மேலும் அந்த சிறுவன் பல முறை கத்தியால் குத்தப்பட்ட நிலையில் உயிரிழந்திருப்பது பிரேத பரிசோதனையில் தெரியவந்துள்ளது.

இது குறித்து தகவலறிந்த அந்த சிறுவனின் குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்துள்ளதாகவும், கடும் வேதனையில் உள்ளதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே காவல்துறையினர் இந்த சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் யாராவது இருந்தால் உடனடியாக தகவல் தெரிவிக்கும்படி கேட்டுக் கொண்டுள்ளனர். இருப்பினும் இந்த சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் யாரையும் இதுவரை கைது செய்யவில்லை என்றே கூறப்படுகிறது.

Contact Us