“கருத்தடை மாத்திரை கொடுத்து கெடுத்தார் “-ஐ.ஏ.எஸ். அதிகாரி மீது இளம் பெண் புகார்

மராட்டிய மாநிலத்தை சேர்ந்தவர் சினேகல் லோகண்டே,2017-ம் ஆண்டு ஐ.ஏ.எஸ். படித்து முடித்தார் .தற்போது இவர் கர்நாடக மாநிலம் கலபுரகி மாநகராட்சி கமிஷனராக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் சினேகல் லோகண்டே மீது டெல்லி இளம்பெண் ஒருவர் பரபரப்பு புகார் ஒன்று கூறியுள்ளார்.
அந்த பெண் கூறிய புகாரில் தானும் அந்த சினேகல் லோகண்டேவும் கடந்த 2017-ம் ஆண்டு முதல் காதலித்து வந்ததாகவும் ,அதன் பிறகு பல முறை போனில் பேசி வந்ததாகவும் கூறினார் .

இந்நிலையில் கடந்த 2019-ம் ஆண்டு சினேகல் லண்டன் சென்றார். அப்போது அவர் டெல்லிக்கு வந்த போது , சினேகல் தன்னோடு ஒரு ஓட்டலில் 3 நாட்கள் தங்கி இருந்ததாகவும் ,அப்போது அவர் கருத்தடை மாத்திரைகளை கொடுத்து அவரிடம் உல்லாசமாக இருந்ததாகவும் கூறினார் .
அவர் மேலும் கூறுகையில் “தற்போது அவர் என்னை திருமணம் செய்ய மறுப்பதுடன், என்னுடன் பேசுவதையும் தவிர்த்து வருகிறார். திருமணம் செய்வதாக கூறி உல்லாசம் அனுபவித்துவிட்டு தற்போது என்னை மோசடி செய்ய பார்க்கிறார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்”என்று அவர் கர்நாடக மாநில முதல்வருக்கு அனுப்பிய கடிதத்தில் கூறியுள்ளார் .

மேலும் அந்த பெண் சினேகல்லுடன் பேசிய வாட்ஸ்-அப் பதிவுகள், சினேகல்லின் புகைப்படத்தையும் அந்த இளம்பெண் டுவிட்டரில் பதிவு செய்து உள்ளார்.
தன் மீதான குற்றச்சாட்டு அனைத்தும் பொய் என்று ஐ.ஏ.எஸ். அதிகாரி சினேகல் லோகண்டே கூறினார்

Contact Us