ராஜுவுக்கு தகுதியே இல்லை.. நிரூப்பை புரட்டி எடுத்த ஆண்டவர்

பிக்பாஸ் சீசன் 5 டைட்டிலை பெறுவதற்காக போட்டியாளர்கள் அனைவரும் ஒருவருக்கொருவர் கடுமையாக போட்டி போட்டு வருகின்றனர். அதிலும் மற்றவர் வெற்றி பெறக் கூடாது என்பதற்காக சிலர் கடுமையாக முயற்சி செய்து வருகின்றனர். இன்று வெளியாகியுள்ள ஒரு ப்ரோமோவில் பிக்பாஸ் வீட்டில் போட்டியாளராக இருக்கும் நிரூப் பிக்பாஸ் டைட்டிலை பெறுவதற்கு தகுதி இல்லாத நபர் என்று ராஜீவை கூறுகிறார். பிறகு அதற்கான ஒரு அதிர்ச்சி தரும் விளக்கத்தையும் கொடுக்கிறார். அதாவது ராஜு பிக்பாஸ் வீட்டில் அனைவரையும் சிரிக்க வைக்கிறார், அவருக்கு நகைச்சுவை திறமை எல்லாம் இருக்கிறது. ஆனால் அவருக்கு பிக் பாஸில் போட்டி போடும் வெறி இல்லை என்று சொல்கிறார்.

மேலும் அவருக்கு பதில் அபிஷேக் இந்த இடத்தில் இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். நான் அவரை ஒரு கடுமையான போட்டியாளராக பார்த்தேன். அவர் பயன்படுத்தும் உத்தி மற்றும் செயல்பாடுகள் அனைத்தும் சிறப்பாக இருக்கும் என்று கூறுகிறார்.அவர் கூறுவதை மிகவும் உன்னிப்பாக கேட்டுக் கொண்டே வந்த ஆண்டவர் அவரிடம் அபிஷேக்கும் நிறைய காமெடி பண்ணுவாரே என்று கேட்கிறார். இவ்வாறு அந்த ப்ரோமோ முடிகிறது. ராஜு ஒவ்வொரு வாரமும் நாமினேட் ஆகும் போது முதலாவது ஆளாக சேவ் செய்யப்படுவார்.

இது பிக் பாஸ் வீட்டில் இருக்கும் பலருக்கும் ஒரு வித பொறாமையை ஏற்படுத்தியது. இதுதவிர நிரூப் வாராவாரம் கடைசி ஆளாக சேவ் செய்யப்படும் போது மிகவும் குழப்பம் மற்றும் பதட்ட நிலையில் இருப்பார். மேலும் மக்களின் ஆதரவோடு இருக்கும் ராஜு விலகினால் தனக்கு ஒரு வாய்ப்பு கிடைக்கும் என்பதும் நிரூப்பின் இந்த பேச்சுக்கு காரணமாக இருக்கலாம். ஆனால் வைல்ட் கார்டு என்ட்ரி ஆக வந்த பின் கூட மறுவாரமே வீட்டை விட்டு வெளியேறிய அபிஷேக் கடுமையான போட்டியாளர் என்று நிரூப் கூறியது பிக்பாஸ் ரசிகர்களை விட நிச்சயம் அபிஷேகத்திற்கு அதிர்ச்சியைக் கொடுத்திருக்கும்.

Contact Us