Posted in

மாப்பிள்ளையை 400 அடி பள்ளத்தில் தள்ளிக் கொன்ற மணமகள்:  சிக்கிய திகில் பின்னணி!

மகாராஷ்டிர மாநிலம் புனே அருகே உள்ள புகழ்பெற்ற லோஹாகாட் (Lohagad Fort) கோட்டைப் பகுதியில் சில தினங்களுக்கு முன்பு ட்ரெக்கிங் (Trekking) சென்ற வாலிபர் ஒருவர், 400 அடி உயரக் மலை உச்சியிலிருந்து தவறி விழுந்து உயிரிழந்ததாகக் கூறப்பட்ட சம்பவம் தற்போது நாட்டையே உலுக்கும் ஒரு கொடூரக் கொலைக் குற்றமாக மாறியுள்ளது. தனக்கு நிச்சயிக்கப்பட்ட பிரம்மாண்ட திருமணத்தை நிறுத்த விரும்பிய 20 வயது இளம் பெண்ணும், அவரது கள்ளக்காதலனும் இணைந்து, அந்த அப்பாவிக் காதலனை திட்டமிட்டு மலை உச்சியிலிருந்து தள்ளிப் படுகொலை செய்திருப்பது போலீஸ் விசாரணையில் அம்பலமாகியுள்ளது.

புனேவைச் சேர்ந்த 26 வயதான கேதன் அகர்வால் என்ற கோடீஸ்வர வாலிபருக்கும், சியா கோயல் என்ற 20 வயது பெண்ணுக்கும் குடும்பத்தினரால் முறைப்படி திருமணம் நிச்சயிக்கப்பட்டு, பல கோடி ரூபாய் செலவில் திருமண ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வந்தன. ஆனால், சியாவிற்கு இந்த ஏற்பாட்டில் துளியும் விருப்பமில்லை; அவர் ஏற்கனவே மற்றொரு வாலிபரைத் தீவிரமாகக் காதலித்து வந்துள்ளார். இந்த கட்டாயத் திருமணத்தை நிறுத்தவும், கோடிஸ்வர மாப்பிள்ளையைத் தனது பாதையிலிருந்து நிரந்தரமாக அகற்றவும் நினைத்த சியா, தனது கள்ளக்காதலனுடன் சேர்ந்து ஒரு பயங்கரமான ஸ்கெட்ச் (Plot) போட்டுள்ளார்.

அதன்படி, திருமணத்திற்கு முந்தைய ‘ப்ரீ வெட்டிங் போட்டோஷூட்’ (Pre-wedding Photoshoot) நடத்துவதற்கான இடத்தை தேர்வு செய்வது போல நடித்து, கேதனை லோஹாகாட் கோட்டைக்கு சியா தனியாக அழைத்துச் சென்றுள்ளார். அங்கே மலை உச்சியின் ஆபத்தான பகுதியில் கேதனை நிற்க வைத்து, யாரும் எதிர்பாராத நேரத்தில் பின்னால் இருந்து சியாவும் அவளது காதலனும் சேர்ந்து அவரை 400 அடி ஆழமுள்ள பாதாளத்திற்குள் தள்ளிவிட்டனர். பின்னர் போலீசாரிடம் வந்த சியா, கேதன் செல்ஃபி எடுக்க முயன்றபோது எதிர்பாராதவிதமாகக் கால் தவறி விழுந்துவிட்டதாக எவ்வித சலனமும், கண்ணீரும் இன்றி நாடகமாடியுள்ளார்.

ஆனால், உயிரிழந்த கேதனின் சகோதரிக்கு, சியாவின் முன்னுக்குப் பின் முரணான பேச்சிலும், அவரது பதற்றமில்லாத நடவடிக்கைகளிலும் சந்தேகம் எழுந்தது. உடனே அவர் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் சியாவின் செல்போன் தரவுகள் மற்றும் அவரது காதலனின் நடமாட்டத்தை தீவிரமாகத் துலக்கியபோது, அவர்கள் இருவரும் முன்கூட்டியே அந்த மலைப் பகுதிக்கு வந்து ரெக்டி (Reconnaissance) செய்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. போலீசாரின் கிடுக்கிப்பிடி விசாரணையில், தங்கள் கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த மாப்பிள்ளையைத் தள்ளிவிட்டுக் கொன்றதை இருவரும் ஒப்புக்கொண்டனர். தற்போது நீதிமன்றம் இருவரையும் 7 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க உத்தரவிட்டுள்ளது.