Posted in

அமைச்சர் கீர்த்தனா மீது திட்டமிட்டு வன்மப் பரப்புரை! – அமைச்சர் ராஜ்மோகன் பரபரப்பு குற்றச்சாட்டு..

தமிழக அரசுப் பள்ளி ஆய்வின் போது அமைச்சர் கீர்த்தனா குறித்துச் சமூக வலைதளங்களிலும் ஊடகங்களிலும் வெளியான வீடியோக்கள் மற்றும் விமர்சனங்கள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தன. இந்நிலையில், அமைச்சர் கீர்த்தனா மீது திட்டமிட்டும் வன்மத்தோடும் தவறான கருத்துக்கள் பரப்பப்பட்டு வருவதாகச் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் ராஜ்மோகன் கடுமையாகக் குற்றம்சாட்டியுள்ளார். இந்த விவகாரம் குறித்துச் செய்தியாளர்களைச் சந்தித்து அவர் அளித்த விளக்கம் அரசியல் வட்டாரத்தில் பெரும் கவனத்தைப் பெற்றுள்ளது.

பள்ளி ஆய்வின் போது மாணவியிடம் அமைச்சர் கீர்த்தனா உரையாடிய நிகழ்வைச் சுட்டிக்காட்டிய அமைச்சர் ராஜ்மோகன், “அவர் ஒரு மூத்த அதிகாரியாகவோ அல்லது அரசியல்வாதியாகவோ அங்குச் செல்லவில்லை; ஒரு சொந்த அக்காவைப் போலத் தான் அந்த மாணவியிடம் அன்போடு பேசினார்” என்று தெளிவுபடுத்தினார். ஆனால், அந்த நிகழ்வின் ஒரு குறிப்பிட்டப் பகுதியை மட்டும் வெட்டி எடுத்துத் தவறான அர்த்தத்தில் சித்தரித்து பரப்பி வருவது அரசியல் உள்நோக்கம் கொண்டது எனக் குறிப்பிட்டினார்.

அரசுப் பள்ளிகளின் தரம் மற்றும் மாணவர்களின் நலன் குறித்து ஆய்வு செய்வது அமைச்சர்களின் வழக்கமான பணிதான் என்றும், அதில் எவ்வித விதிமீறலும் இல்லை என்றும் அவர் உறுதிபடத் தெரிவித்தார். மாற்றுக்கட்சியினரும் சில சமூக வலைதளக் குழுக்களும் தவெக அரசின் நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் நோக்கிலும், பெண் அமைச்சரின் தீவிரமான களப்பணியைக் முடக்கும் நோக்கிலும் இதுபோன்ற வன்மப் பரப்புரைகளை முன்னெடுத்து வருவதாக அவர் சாடினார்.

அமைச்சர் கீர்த்தனாவின் செயல்பாடுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் எழுந்த வதந்திகளுக்குப் பதிலளித்த அவர், “அரசின் திட்டங்களும் ஆய்வுகளும் மக்களின் நலனுக்காக மட்டுமே முன்னெடுக்கப்படுகின்றன; இதுபோன்ற பொய்ப் பிரசாரங்களைக் கண்டு அஞ்சாமல் மக்கள் சேவையைத் தொடர்ந்து ஆற்றுவோம்” எனக் கூறினார். அமைச்சர் ராஜ்மோகனின் இந்தத் திடீர் விளக்கக் கூட்டம் அரசியல் களவில் நிலவி வந்த பல்வேறு சர்ச்சைகளுக்குத் முற்றுப்புள்ளி வைக்கும் வகையிலும், கட்சி தொண்டர்களுக்கு நம்பிக்கை அளிக்கும் வகையிலும் அமைந்துள்ளது.