Posted in

நெக்ஸ்பெரியா சீனப் பிரிவு விற்பனையை மீண்டும் தொடங்கியது:

டச்சு நாட்டைச் சேர்ந்த முக்கிய சிப் தயாரிப்பு நிறுவனமான நெக்ஸ்பெரியாவின் (Nexperia) சீனப் பிரிவு, நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சிப் விற்பனையை உள்நாட்டு விநியோகஸ்தர்களுக்கு மீண்டும் தொடங்கியுள்ளதாக  தகவல்கள் தெரிவிக்கின்றன.

நெதர்லாந்து அரசு நெக்ஸ்பெரியாவின் கட்டுப்பாட்டை எடுத்துக் கொண்டதற்கும், சீனா சிப் ஏற்றுமதிக்குத் தடை விதித்ததற்கும் பிறகு ஏற்பட்ட விநியோகச் சங்கிலி நெருக்கடியைத் தணிக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஆனால்… ஒரு திடீர் நிபந்தனை!

விற்பனை மீண்டும் தொடங்கப்பட்டாலும், சீனப் பிரிவு ஒரு கடும் நிபந்தனையை விதித்துள்ளது. இனிமேல், உள்நாட்டு விநியோகஸ்தர்களுக்கான அனைத்து விற்பனையும் அமெரிக்க டாலருக்குப் பதிலாக சீன நாணயமான ரென்மின்பி (யுவான்) மூலம் மட்டுமே மேற்கொள்ளப்பட வேண்டும்.

  • முன்னர் அனைத்துப் பரிமாற்றங்களும் வெளிநாட்டு நாணயங்களில் மட்டுமே நடைபெற்ற நிலையில், இந்த யுவான் கட்டாயம் என்பது குறிப்பிடத்தக்க மாற்றம் ஆகும்.
  • மேலும், விநியோகஸ்தர்களும் தங்கள் வாடிக்கையாளர்களுடன் யுவான் நாணயத்தில் மட்டுமே பரிவர்த்தனை செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

அதிகாரப் போட்டியில் அடுத்த கட்டம்:

இந்த நடவடிக்கை, நெக்ஸ்பெரியாவின் சீனக் கிளை, டச்சுத் தலைமையகத்திடம் இருந்து அதிக சுதந்திரத்துடன் செயல்பட விரும்புவதையும், சீனாவில் விநியோகத்தை நிலைநிறுத்த முயற்சிப்பதையும் காட்டுவதாக ஆதாரங்கள் தெரிவிக்கின்றன.

நெதர்லாந்து அரசாங்கம், சிப் தொழில்நுட்பங்கள் தவறாகப் பயன்படுத்தப்படலாம் என்ற கவலைகளின் அடிப்படையில் நெக்ஸ்பெரியாவின் சீனத் தலைமை நிர்வாக அதிகாரியை நீக்கிவிட்டு, கட்டுப்பாட்டை எடுத்த பிறகு இந்த மோதல் வெடித்தது குறிப்பிடத்தக்கது. இந்த விவகாரம் கார் தயாரிப்பு மற்றும் நுகர்வோர் எலெக்ட்ரானிக்ஸ் துறையில் உலகளாவிய விநியோகச் சங்கிலியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

Loading