ஆளுநர் அர்லேக்கர் கேட்ட 118-ஐ விட 120 பேர் தனக்கு ஆதரவு என்ற கடிதத்தை மிகவும் பெருமையாக விஜய் கொடுத்து, ஒரு தமிழன் நினைத்தால் எதனையும் சாதிக்க முடியும் என்று காட்டி இருக்கிறார் விஜய்.
மத்திய அரசின் நாடகத்தை உடைக்க, உடனே தமிழகக் கட்சிகள் முடிவு செய்தன. உண்மையில் முதல் நகர்வை தமிழக காங்கிரஸ் எடுக்க, அதனைத் தொடர்ந்து கம்யூனிஸ்டுகள் தவெக பக்கம் நகர்ந்தன. இதனைத் தொடர்ந்து விடுதலைச் சிறுத்தைகளும் தற்போது தவெக பக்கம் நகர்ந்துள்ளன. எனவே நாளை காலை 11 மணிக்கு விஜய் பதவி ஏற்க உள்ளார். “C. ஜோசப் விஜய் என்னும் நான்…” என்ற ஒலி விண்ணைப் பிளக்க உள்ளது.