Posted in

லண்டனை தாக்கும் 104 டிகிரி வெப்பம்- பாடசாலைகள் மூட அரசு பெரும் ஏற்பாடு !

பிரிட்டன் வரலாற்றில் இதுவரை கண்டிராத வறண்ட மற்றும் மிகக் கொடூரமான வெயில் இந்த வாரம் தாக்கக்கூடும் என்று வானிலை ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளதால், ஒட்டுமொத்த நாடும் உச்சக்கட்ட பீதியில் உறைந்துள்ளது. இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் வான் எல்லைகளில் வரலாறு காணாத வகையில் 40 டிகிரி செல்சியஸ் (40°C) வரை அனல் காற்று வீசக்கூடும் என்பதால், அந்நாட்டு வரலாற்றில் இரண்டாவது முறையாக மிக அரிதான ‘சிவப்பு எச்சரிக்கை’ (Red Extreme Heat Warning) விடுக்கப்பட்டுள்ளது. இந்த அதீத வெப்ப அலையானது வெறும் சாதாரண அசௌகரியம் அல்ல என்றும், இது பொதுமக்களின் உயிருக்கே ஆபத்தான ஆபத்தை (Risk to Life) விளைவிக்கும் என்றும் வானிலை மையம் எச்சரித்துள்ளது.

இதற்கு முன்னர் கடந்த 2022 ஜூலையில் கோனிங்ஸ்பி பகுதியில் பதிவான 40.3 டிகிரி செல்சியஸே பிரிட்டனின் ஆகக்கூடுதல் வெப்பநிலையாக உள்ளது. ஆனால், தற்போது வீசி வரும் கொடூர வெப்ப அலையானது கடந்த 50 ஆண்டுகளாக ஜூன் மாதத்தில் பதிவாகியிருந்த 35.6 டிகிரி செல்சியஸ் என்ற வரலாற்று சாதனையை ‘சுக்குநூறாக உடைத்து’ (Absolutely Smashed) புதிய உச்சத்தைத் தொடும் என கணிக்கப்பட்டுள்ளது. பகல் நேரத்தில் சுட்டெரிக்கும் அனல் காற்றும், இரவு நேரத்தில் 20 டிகிரிக்கும் குறையாத புழுக்கமான ‘வெப்ப மண்டல இரவுகளும்’ (Tropical Nights) மக்களைக் கடும் சித்திரவதைக்கு உள்ளாக்கியுள்ளன.

இந்த எதிர்பாராத அனல் அவசரநிலை, பிரிட்டனின் உள்கட்டமைப்பை மொத்தமாக முடக்கி சின்னாபின்னமாக்கியுள்ளது. கொளுத்தும் வெயிலால் நாட்டின் 1,000-க்கும் மேற்பட்ட பள்ளிகள் உடனடியாக மூடப்பட்டுள்ளன அல்லது அவற்றின் வேலை நேரங்கள் பாதியாகக் குறைக்கப்பட்டுள்ளன. போக்குவரத்துத் துறையோ முற்றிலும் முடங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது; தண்டவாளங்கள் வெப்பத்தில் வளைந்துவிடக் கூடும் என்பதால் ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டு வருகின்றன. நேற்று மதியம் ‘கிரேட் நார்தர்ன்’ (Great Northern) ரயில் ஒன்று மின்சாரத்தை இழந்து நடுக்காட்டில் நின்றதால், பயணிகள் வேறு வழியின்றி கொதிக்கும் தண்டவாளங்களில் இறங்கி மைல் கணக்கில் நடந்து செல்லும் அவலம் ஏற்பட்டது.

ராணுவக் கட்டுப்பாட்டு COBR அவசரக் கூட்டம் கூட்டும் அளவிற்கு நிலைமை தீவிரமடைந்துள்ளது. இந்த அசாதாரண வெப்பம் மற்றும் காற்றில் உள்ள அதீத ஈரப்பதம் காரணமாக, ஆரோக்கியமான நபர்கள் கூட திடீர் மாரடைப்பு அல்லது வெப்ப வாதம் (Heatstroke) போன்ற உயிராபத்துக்களைச் சந்திக்க நேரிடும் என மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர். பொதுமக்கள் யாரும் தேவையின்றி வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என்றும், ரயில்களில் அவசரப் பயணங்களைத் தவிர்க்குமாறும் பிரிட்டன் அரசு மக்களைக் கெஞ்சிக் கேட்டுக்கொண்டுள்ளது.