ATHIRVU.COM
Saturday, August 18 2018

LYAC TV

குழந்தையை மிரட்டிய பிரிட்டிஸ் எயார்வேய்ஸ் ஊழியர்..

Aug 10, 2018    1120

இந்தியத் தம்பதியின் 3 வயது குழந்தையொன்று விமானத்தில் அழுத காரணத்தால் இனத்துவேஷவார்த்தைகளால் அவர்களைவிளித்து விமானத்தில் இருந்து இறக்கிய பிரிட்டிஷ் ஏர்வேஸ் நிறுவனத்தின் மீது கண்டனங்கள் குவிந்துவருகின்றன.

கடந்த மாதம் 23 ஆம் திகதி லண்டன் சிற்றி விமானநிலையத்தில் இருந்து பெர்லின் நகருக்கு பறக்கத்தயாராக இருந்த பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

விமானம் புறப்பட இருந்தநேரத்தில் இந்திய தம்பதியின் மகன் திடீரென்று அழ ஆரம்பித்ததால் அழுகைசத்தம் விமானம் முழுவதும் எதிரொலித்தது. குழந்தையின் அழுகையைக் கட்டுப்படுத்த பெற்றோர் தீவிரமாக முயற்சித்தபோதும் அது இயலவில்லை.

இந்த நிலையில் சீற்றமடைந்த விமானஊழியர் ஒருவர் அழுகையை நிறுத்தாவிடில் ஜன்னலால் எறிந்துவிடுவேன் என அந்த குழந்தையை மிரட்டியிருக்கிறார்.

விமானத்தில் பணியாற்றிய ஏனைய ஊழியர்களும், குழந்தையின் அழுகை ஏனைய பயணிகளுக்கு தொந்தரவாக இருப்பதாக கூறி விமானத்தில் இருந்து பெற்றோருடன் சேர்த்து குழந்தையை இறங்கிவிட்டனர்

அந்தவேளை இந்தியர்கள் எப்போதுமே இப்படித்தான் நடந்துகொள்வார்கள் எனஇந்தியத் தம்பதியை ஊழியர்கள் இனவெறியுடன் திட்டி, அவமானப்படுத்தியதாகவும் கூறப்படுகிறது.

தற்போது இந்தவிடயம் குறித்து பெற்றோர் இந்திய மத்திய விமானப் போக்குவரத்துறை அமைச்சர் சுரேஷ் பிரபுவிடம் முறைப்பாடு அளித்துள்ளனர்.

இதேவேளை இந்த விடயத்தை தமது நிறுவனமும் தீவிரமாக எடுத்துக்கொள்ளும் எனவும் இனவெறி உள்ளிட்ட எந்த பாகுபாட்டையும் தமது நிறுவனம் பொறுத்துக்கொள்ள மாட்டாதென பிரிட்டிஷ் ஏர்வேஸ் குறிப்பிட்டுள்ளது.

 


Loading...