Posted in

குற்ற உணர்ச்சியில் தாய் செய்த கொடூரம்: மாற்றுத்திறனாளி மகளைக் கொன்ற செவிலியருக்கு சிறை

இங்கிலாந்தில், தான் பார்த்துவந்த செவிலியர் (Nurse) பணியை இழந்த மன உளைச்சலில், தனது 4 வயது மாற்றுத்திறனாளி மகளைக் கொடூரமாகக் குத்திக் கொன்ற தாய்க்கு நீதிமன்றம் 12 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்துத் தீர்ப்பளித்துள்ளது. Bury பகுதியைச் சேர்ந்த விடியல் காலக் கொடூரமாக நடந்த இச்சம்பவம், நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

தனியார் வழக்கு நிறுவனத்திற்கு நோயாளிகளின் ரகசியத் தகவல்களைத் தவறாகப் பகிர்ந்து வழாங்கிய குற்றச்சாட்டின் கீழ், பணிநீக்கம் செய்யப்பட்டவர் டான் மேக்கின் (Dawn Makin). வேலையை இழந்து பொருளாதார ரீதியாகவும், மனரீதியாகவும் கடுமையாகப் பாதிக்கப்பட்ட இவர், நீதிமன்றத்தின் அழைப்பாணை (Summons) வந்த இரண்டே நாட்களில் இந்த விபரீத முடிவை எடுத்துள்ளார். மன அழுத்தம் உச்சமடைந்த நிலையில், தன் மகளுக்குத் தானே தீங்கிழைத்துள்ளார்.

சம்பவத்தன்று, தனது 4 வயது மகள் க்ளோவைக் கத்தியால் குத்திக் கொன்ற டான் மேக்கின், தானும் ஆண்டிஃபிரீஸ் (Antifreeze) எனும் நச்சு திரவத்தைக் குடித்துத் தற்கொலைக்கு முயன்றுள்ளார். தகவல் அறிந்து விரைந்து வந்த அதிகாரிகள், சிறுமியின் உடலைக் கைப்பற்றி டானை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். நச்சு திரவத்தைக் குடித்ததால் டானின் உடலுறுப்புகள் முடங்கி, அவர் வாழ்நாள் முழுமைக்கும் சக்கர நாற்காலியைப் பயன்படுத்தும் நிலைக்குத் தள்ளப்பட்டார்.

நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு வந்தபோது, தீவிர மன உளைச்சல் மற்றும் கட்டுப்படுத்த முடியாத மன நலக் குறைபாடு காரணமாகவே டான் இச்செயலில் ஈடுபட்டதாக ஒப்புக்கொள்ளப்பட்டது. “மகளைத் தனியாக விட்டுச்செல்ல மனமில்லாமல் இந்முடிவை எடுத்தேன்” என அவர் எழுதிய தற்கொலைக்குறிப்பும் சமர்ப்பிக்கப்பட்டது. அனைத்து வாதங்களையும் பரிசீலித்த நீதிபதி, குற்றத்தின் தீவிரத்தைக் கருத்தில் கொண்டு அவருக்கு 12 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து உத்தரவிட்டார்.