Posted in

தொகுதிக்கு 5 அமைச்சர்கள் – மதுராந்தகம், தாராபுரத்தைக் கைப்பற்ற முதல்வர் விஜய் வகுத்த அதிரடி பிளான்!

தமிழகத்தில் அக்டோபர் 6-ஆம் தேதி நடைபெறவுள்ள மதுராந்தகம் மற்றும் தாராபுரம் (தனி) ஆகிய இரு சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் வெற்றிபெற்றுத் தனது ஆட்சியின் பெரும்பான்மையை மேலும் பலப்படுத்திக்கொள்ள, தொகுதிக்குத் தலா 5 அமைச்சர்கள் கொண்ட அதிரடிப் படைகளைக் களமிறக்கத் தமிழக வெற்றிக் கழகத் தலைவரும் முதலமைச்சருமான சி.ஜோசப் விஜய் திட்டமிட்டுள்ளார்.

சமீபத்தில் நடைபெற்ற பொதுத் தேர்தலுக்குப் பின், அதிமுகவிலிருந்து விலகிய சட்டமன்ற உறுப்பினர்களின் ராஜினாமாவால் காலியான மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகளுக்குத் தேர்தல் ஆணையம் இடைத்தேர்தல் அறிவித்துள்ளது. 234 உறுப்பினர்களைக் கொண்ட பேரவையில் பெரும்பான்மை பலத்தைத் தக்கவைத்துக்கொள்ளவும், கூட்டணிக் கட்சிகளின் தயவைக் குறைத்துத் தவெகவின் தனிப் பலத்தை உயர்த்தவும் இவ்விரு தொகுதிகளின் வெற்றியும் முதலமைச்சர் விஜய்க்கு மிக அத்தியாவசியமானதாக மாறியுள்ளது.

இதனை முன்னிட்டு, தாராபுரம் தொகுதிக்கான தேர்தல் தேர்தல் பொறுப்பாளராகத் மூத்த அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையனையும், மதுராந்தகம் தொகுதிக்கான தேர்தல் பொறுப்பாளராக அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவையும் நியமிக்கத் தவெக தலைமை முடிவெடுத்துள்ளது. மேலும், ஒவ்வொரு தொகுதிக்கும் தலா 5 அமைச்சர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகளைக் கொண்ட சிறப்புக் குழுக்களை அமைத்து, கள அளவிலான வாக்குச் சேகரிப்பு மற்றும் தேர்தல் பணிகளை முடுக்கிவிட விஜய் அதிரடி உத்தரவிட்டுள்ளார்.

எதிர்க்கட்சியான அதிமுக வேட்புமனு விநியோகத்தைத் தொடங்கி தீவிரம்காட்டி வரும் வேளையில், ஆளும் தவெக அரசின் இந்த ‘அமைச்சர் படை’ வியூகம் இடைத்தேர்தல் களம் சூடேற வழிவகுத்துள்ளது. தவெக அரசின் 3 மாத கால ஆட்சிக்கான முதல் பரீட்சையாகப் பார்க்கப்படும் இந்த இடைத்தேர்தலில் வெற்றிபெற்றுத் தனது அரசியல் செல்வாக்கை நிரூபிக்கத் தவெக முன்னணி தலைவர்கள் தற்போதே களமிறங்கிவிட்டனர்.