பணக்கார பாப்பாவாக வாழும் தமன்னா… சொத்து மதிப்பு இத்தனை கோடியா?

பணக்கார பாப்பாவாக வாழும் தமன்னா… சொத்து மதிப்பு இத்தனை கோடியா?

தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக பார்க்கப்படுவர் நடிகை தமன்னா. இவர் தமிழ் தெலுங்கு உள்ளிட்ட மொழி திரைப்படங்களில் ஹிட் படங்களில் நடித்து நட்சத்திர நடிகையாக ஜொலித்துக் கொண்டிருக்கிறார் .

முதன் முதலில் தமிழில் கேடி திரைப்படத்தின் மூலமாக அறிமுகமாகி வியாபாரி, கல்லூரி, நேற்று இன்று நாளை, படிக்காதவன், ஆனந்த தாண்டவம், கண்டேன் காதலை, பையா, சுறா, தில்லாலங்கடி, சிறுத்தை, வேங்கை, வீரம் , நண்பேன்டா உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் தமன்னா நடித்திருக்கிறார்.

இதனிடையே பிரபல பாலிவுட் நடிகரான விஜய் வர்மாவை காதலித்து வருகிறார். இவர்கள் விரைவில் திருமணம் செய்து கொள்ளவும் திட்டமிட்டு இருக்கிறார்கள். இப்படியான நேரத்தில் தமன்னாவின் சொத்து மதிப்பு குறித்து விளம்பரம் வெளியாகி உள்ளது. தமன்னா 120 கோடி ரூபாய்க்கு அதிபதியாக இருக்கிறார்.

மும்பையில் 20 கோடிக்கு மதிப்புள்ள வீடு, ஹைதராபாத், சென்னையில் பல கோடிக்கு மதிப்புள்ள பிளாட், அது மட்டுமின்றி, MW 320i, Mercedes-Benz GLE, Mitsubishi Pajero போன்ற பிரம்மாண்ட சொகுசு கார்களை வைத்து கொண்டு கோடியில் புரளுகிறார் தமன்னா.