தமிழகத்தில் ஆளுநர் ஆட்சி வர இன்னும் 48 மணிநேரம் மட்டுமே இருக்கிறது. ஆனால் இன்னும் ஹோட்டல் அறையிலிருந்து தொல். திருமாவளவன் வெளியே வரவில்லை. வயதுக்கு வந்த பெண்ணைப் போல அவர் அறையிலேயே அடைந்து கிடக்கிறார். கடைசி நேரம் வரை இழுத்தடித்தால், விஜய்யிடம் அதிக அளவில் பேரம் பேச முடியும் என்று திருமாவளவன் கருதுவது, அவரது அரசியல் அநாகரிகத்தைத் தெளிவாக எடுத்துக் காட்டுகிறது.
சென்னை மீனம்பாக்கத்தில் உள்ள ஒரு நட்சத்திர ஹோட்டலில் தங்கியுள்ள தொல். திருமாவளவன், இன்று மாலை 4 மணிக்குச் செய்தியாளர் சந்திப்பை நிகழ்த்துவார் என்று அவரது விசிக கட்சி உறுப்பினர்கள் தெரிவித்து இருந்தாலும், அது நடக்குமா என்று தெரியவில்லை. ஏனெனில் கடந்த 3 நாட்களாக இப்படித்தான் கூறிக்கொண்டு, நேரத்தை இழுத்தடித்தபடி ஓரிடத்தில் முடங்கிக் கிடக்கிறார் திருமாவளவன்.
கதவைப் பூட்டிக்கொண்டு ஒரு அறைக்குள் உட்கார்ந்து, வீடியோ காலில் பேசிக்கொண்டு இருக்கிறார். ஒரு சமூகப் பொறுப்பற்ற மனிதராகத் தொல். திருமாவளவன் செயல்படுவதும், தவித்த முயலை அடிப்பது போல இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி எதையெல்லாம் தவெகவிடம் இருந்து பெற்றுவிட முடியுமோ, அதையெல்லாம் பெற்றுவிடலாம் என்று கணக்குப் போடுகிறாரா என்பது தெரியவில்லை.
இன்று 4 மணிக்கு அவர் வெளியே வருவாரா? பத்திரிகை நண்பர்களைச் சந்திப்பாரா? இவை எல்லாமே மில்லியன் டாலர் கேள்விகள்தான். ஆனால் அதுவரை தமிழகத் தொலைக்காட்சி சேனல்கள் எல்லாம் கிடைக்கும் எல்லாப் பொய் செய்திகளையும் போட்டு மக்களைப் பெரும் பரபரப்பில் வைத்திருப்பார்கள் என்பது மட்டும் உறுதி. இப்படி ஒரு வாய்ப்பு இனி தமிழக சேனல்களுக்குக் கிடைக்கப் போவதே இல்லை. எனவே பொறுத்திருந்து பார்ப்போம் திருமாவளவன் என்ன சொல்லப் போகிறார் என்று. கம்யூனிஸ்டுகள் எடுக்கும் முடிவே தனது முடிவு என்று கூறிவிட்டு, தற்போது கம்யூனிஸ்டுகள் ஒரு முடிவை எட்டிய நிலையில் திருமாவளவன் மட்டும் பூட்டிய அறைக்குள் இருப்பது கம்யூனிஸ்டுகளையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.