Posted in

ரீல்ஸ் போட்டால் மட்டும் மாநில சுயாட்சி வந்துவிடாது – தவெக அரசைச் சாடிய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின்!

சமூக வலைத்தளங்களில் வெறும் ‘ரீல்ஸ்’ (Reels) வீடியோக்களைப் பதிவிடுவதால் மட்டுமே மாநில சுயாட்சியை நிலைநாட்ட முடியாது என்று தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவரும் திமுக செயல்தலைவருமான உதயநிதி ஸ்டாலின் தவெக அரசை மிகக் கடுமையாக விமர்சித்துள்ளார். மத்திய – மாநில அரசுகளின் உறவுகள் குறித்து ஆராய்வதற்காக அமைக்கப்பட்ட உயர்நிலைக் குழுவின் செயல்பாடுகளைத் தவெக அரசு முடக்கி வருவதாகக் குற்றம் சாட்டியுள்ள அவர், மாநில உரிமைகளைப் பாதுகாக்கத் தவெக அரசிற்குத் தைரியமில்லை என்றும் சாடியுள்ளார்.

முந்தைய திமுக ஆட்சிக் காலத்தில், ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதியரசர் குரியன் ஜோசப் தலைமையில் மத்திய – மாநில அரசுகளுக்கு இடையேயான நிதி மற்றும் அதிகாரப் பகிர்வு உறவுகள் குறித்து ஆராய உயர்நிலைக் குழு ஒன்று அமைக்கப்பட்டது. இக்குழு மாநில சுயாட்சி குறித்த தனது இரண்டாவது ஆய்வறிக்கையைத் தயார் செய்து வந்த நிலையில், தற்போது போதிய பணியாளர்களோ அல்லது நிதி ஆதாரங்களோ ஒதுக்கப்படாமல் இக்குழுவின் பணிகளைத் தவெக அரசு முடக்கியுள்ளதாகக் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இது தொடர்பாகத் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் காரசாரமான கண்டன அறிக்கை வெளியிட்டுள்ள உதயநிதி ஸ்டாலின், “மாநில உரிமைகள் குறித்துப் பேசுவதற்கும், மத்திய அரசிடம் உரிமைகளைக் கேட்டுப் போராடுவதற்கும் பயப்படும் தவெக அரசு, அது குறித்து ஆய்வு செய்யக்கூடப் பயந்து நடுங்கி இந்த உயர்நிலைக் குழுவை முடக்குவது வெட்கக்கேடானது” எனக் குறிப்பிட்டுள்ளார். மேலும், வெறும் விளம்பர ரீல்ஸ்களை மட்டுமே நம்பி ஆட்சி நடத்தும் இந்த அரசு, மாநில சுயாட்சியின் முக்கியத்துவத்தைப் புரிந்து கொள்ள வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

மத்திய அரசின் அதிகாரக் குவிப்பிற்கு எதிராக மாநில சுயாட்சிக் குரல்கள் உரக்கச் கேட்க வேண்டிய இக்காலகட்டத்தில், அமைக்கப்பட்டக் குழுவையே முடக்கும் ‘டம்மி அரசாங்கமாக’ தவெக செயல்பட்டு வருகிறது எனச் சாடிய உதயநிதி, உடனே நீதியரசர் குரியன் ஜோசப் தலைமையிலான குழுவின் ஆய்வுகள் தொய்வின்றித் தொடர நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளார். சட்டமன்ற இடைத்தேர்தல்கள் மற்றும் அரசியல் மாற்றங்கள் நிலவும் இச்சூழலில், தவெக அரசின் மாநில சுயாட்சி நிலைப்பாடு குறித்து எதிர்க்கட்சித் தலைவர் முன்வைத்துள்ள இக்கடுமையான விமர்சனம் தமிழக அரசியல் களத்தில் பெரும