கங்குவா படத்தின் ரிலீஸ் தள்ளிப் போகுதா?

கங்குவா படத்தின் ரிலீஸ் தள்ளிப் போகுதா?

சூர்யா நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வருகிறது கங்குவா திரைப்படம். சூர்யாவின் 42 ஆவது படமான கங்குவா திரைப்படத்தை சிறுத்தை சிவா மிக பிரம்மாண்டமாக இயக்கி வருகிரார். இந்த கதை நிகழ்காலம் மற்றும் சில நூற்றாண்டுகளுக்கு முந்தைய காலம் என இரு காலகட்டங்களில் நடக்கும் விதமாக உருவாக்கப்பட்டுள்ளது. இப்போது விறுவிறுப்பாக ஷூட்டிங் நடந்து வரும் நிலையில் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் ரிலீஸ் ஆகும் என சொல்லப்படுகிறது.

படத்தின் இறுதிகட்ட ஷூட்டிங் முடிந்து போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் நடந்து வரும் நிலையில் படம் இந்த ஆண்டு ஏப்ரல் 11 ஆம் தேதி வியாழக் கிழமை ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளதாக சொல்லப்பட்டது. ஆனால் கங்குவா திரைப்படத்தை தயாரிக்கும் ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரிக்கும் மற்றொரு படமான தங்கலான் படம் ஏப்ரலில் ரிலீஸ் ஆகும் என இப்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

அதனால் கங்குவா படத்தின் ரிலீஸ் ஏப்ரல் மாதத்தில் இருந்து தள்ளிப் போக வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது. இது சூர்யா ரசிகர்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. கடைசியாக சூர்யா நடித்த எதற்கும் துணிந்தவன் திரைப்படம் 2022 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் ரிலீஸ் ஆனது குறிப்பிடத்தக்கது.