சீமானுக்கு காசு சேர்த்த புலம் பெயர் நபர்கள் போட்ட கட்டிங் எவ்வளவு: புள்ளி விபரங்கள்


2009ல் நீங்கள் பார்த்த சீமான் வேறு. தற்போது நீங்கள் பார்க்கும் சீமான் வேறு. அன்று அவர் ஏதோ தமிழர்களுக்கு செய்யவேண்டும் என்று அரசியலை தொடங்கி இருக்கலாம். நாம் மறுக்கவில்லை ஆனால் இன்று தமிழக அரசியல் சாக்கடையில் விழுந்து, புரண்டு, லஞ்ச அரசியல்வாதியாக மாறிவிட்டார். அவ்வளவிற்கும் காரணம் வெளிநாட்டில் இருந்து ஈழத் தமிழர்களிடம் இருந்து சென்ற கோடி கோடியான பணம் தான். நாம் தான் (வெளிநாட்டு தமிழர்கள்) அவரை இப்படி மாற்றியிருக்கிறோம். ஒரு பணப் பிசாசாக மாற்றி இருக்கிறோம்.

இதேவேளை வெளிநாடுகளில் சிமானுக்கு பணம் சேர்த்த நபர்களும், அப்படியே அந்தக் காசை சீமானுக்கு அனுப்புவதும் இல்லை. அதில் கமிஷன் எடுத்துக் கொள்கிறார்கள். இந்தப் பணத்தில் அவர்களும் கொள்ளையடித்து, கனடாவில் ஸ்காபரோவில் ஒருவர் கடை போட்டு உள்ளார். மற்ற நபர் நகைக் கடை திறந்துள்ளார். அதுபோலவே லண்டன் மற்றும் ஏனைய ஐரோப்பிய நாடுகளில் நடந்து வருகிறது. இவர்கள் யார் ? யார் ? இவர்களின் சொத்து மதிப்பு என்ன என்பது தொடர்பாக ஒரு புள்ளிவிபரச் செய்தி , அதிர்வு இணையத்தில் வெளியாக உள்ளது.

இது இவ்வாறு இருக்க, பிக் -பாஸ் பார்க்கும் மற்றும் YouTubeல் வீடியோக்களை பார்க்கும் ஒரு கும்பல், ஆம் சீமான் சொல்வது சரி தானே. தலைவரின் அண்ணன் மகனுக்கு என்ன தகுதி இருக்கிறது என்று பேச ஆரம்பித்து இருக்கிறார்கள். 

அடப் பாவிகளா, நீங்கள் ஈழத் தமிழர்களாக இருந்து கொண்டு எப்படி இதுபோல நா கூசாமல் பேசுகிறீர்கள் ? உங்களுக்காக 35 வருடம் போராடி இறந்து, போனவர்களையும், அவர்களின் குடும்ப உறுப்பினர்களையும், அனைத்துக்கும் மேலாக தலைவரது பெறா மகனைப் பற்றியே பொதுவெளியில் தேவடியா மகன் என்று பேசிய சீமான் நல்லவர். உங்களுக்காக 35 வருடம் போராடிய போராளிகள் கெட்டவர்கள் ஆகிவிட்டார்களா ?

சீமானின் முகத் திரை கிழியத் தொடங்கி விட்டது. அவர் எடுத்து விட்ட பெய்கள், அவர் மக்களை பிழையாக வழி நடத்திச் செல்லும் விதம். இவை அனைத்துமே வெளிவர ஆரம்பித்து விட்டது. ஆனால் சில அறிவில்லாத தமிழர்கள், மட்டும் சீமான் ஈழம் பெற்றுத் தருவார் என்று கனவு காண்கிறார்கள். வாய் கிழியப் பேசினால், உங்கள் உணர்ச்சியை தூண்டும் படி பேசினால், அவர் நல்லவரா ? பகுத்தறிவு வேண்டாமா தமிழர்களே ?


Post a Comment

Previous Post Next Post