JVP இளங்குமரன் MP மீது யாழ் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது


தேசிய மக்கள் சக்த்தி(JVP) கட்சியின் யாழ் மாவட்ட MP இளங்குமரனுக்கு எதிராக யாழ் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. யாழில் சுண்ணக் கல்லை ஏற்றிச் சென்ற வாகனம் ஒன்றை, இடை மறித்த MP இளங்குமரன், அதனை மடக்கி, பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்து விட்டுச் சென்றுள்ளார். யாழில் இயங்கி வரும் நிறுவனம் ஒன்றுக்கு சொந்தமான, இந்த வாகனத்தையே இளங்குமரன் இவ்வாறு மடக்கியுள்ளார்.

இதனை அடுத்து குறித்த நிறுவனத்தின் உரிமையாளர், யாழ் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றை பதிவு செய்துள்ளார். தாம் அதிகார பூர்வமாக அனுமதி பெற்றே, சுண்ணக் கல் வியாபாரம் செய்வதாகவும். தனக்கும் தமது கம்பெனிக்கும் அவ கீர்த்தியை ஏற்படுத்தவே MP இளங்குமரன் இவ்வாறு செய்துள்ளார் என்று அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். இதனை அடுத்து பொலிசார் இது தொடர்பாக விசாரணைகளை முடிக்கி விட்டுள்ளார்கள். 

புதியது பழையவை

தொடர்பு படிவம்